கரூர் அருகே பொய்யாமணி மகா மாரியம்மன் காளியம்மன் கோயில் ஆனித் திருவிழா

கிடா வெட்டுதல், மாவிளக்கு பூஜையும், இரவில் சுவாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது

Continues below advertisement

குளித்தலை அருகே பொய்யாமணி மகா மாரியம்மன் காளியம்மன் கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு குட்டி குடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Continues below advertisement

 


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புளியாமணியில் ஸ்ரீ மகா மாரியம்மன், காளியம்மன், மலையாள சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருட ஆனித் திருவிழா கடந்த ஜூலை 4ம் தேதி கரகம் பாலித்தலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

 

 

 


அதனைத் தொடர்ந்து கிடா வெட்டுதல், மாவிளக்கு பூஜையும், இரவில் சுவாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக வந்த மலையாள சுவாமி மருளாளி பொய்யாமணியை சுற்றியுள்ள நான்கு இடங்களில் ஆட்டுக்குட்டியின் கழுத்தை கடித்து ரத்தம் குடித்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் வாக்கும் கூறினார்.

 

 


 

இதில் பொய்யாமணியைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி குட்டி கொடுத்தல் நிகழ்ச்சியை கண்டு களித்தும் அருள் வாக்கு கேட்கும் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola