வெண்பா - கவின் ஜோடிக்கு சோஷியல் மீடியாவில் இருக்கும் ரீச் மிகப் பெரியது. அதிலும் டிக் டாக் மூலம் பிரபலமான பிரீத்தி ஷர்மா பற்றி சொல்லவே வேண்டாம். சித்தி 2 வெண்பாவின் உண்மையான பெயர் இதுதான். லக்னோவில் பிறந்த இவர் தற்போது கோயம்புத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் சினிமா பயணம் 12 ஆவது படிக்கும் போதே தொடங்கி விட்டது. 11 ஆம் வகுப்பு முடிக்கும் தருவாயில் `கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல’ எனும் டெலி ஃபிலிம் மூலம் இவரின் மீடியா வாழ்வை துவகிங்கினார். பின்பு மாடலிங்கிலும் கலக்க தொடங்கிய இவர் தற்போது சீரியலில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.



ரேடான் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா திரைப்படங்களையும், சீரியல்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பழைய சித்தி சீரியலின் இரண்டாம் பாகமாக சித்தி 2 சீரியலை தயாரித்து வருகிறார் ராதிகா. இந்த சீரியலில் ராதிகாவுக்கு மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் ப்ரீத்தி ஷர்மா நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கவின் என்பவர் நடித்து வருகிறார். கடந்தாண்டு இறுதியில் நடிகை ராதிகா இந்த சீரியலில் இருந்து விலகியதால், வெண்பா, கவின், யாஷினி ஆகியோரை சுற்றி தான் தற்போது கதை பெரும்பாலும் நகர்ந்து வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும், நடிகை ப்ரீத்தி ஷர்மாவிற்கு சமீப காலத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.






எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான கந்தாசாமி படத்தில், இடம்பெற்ற 'எஸ்கியூஸ்மி மிஸ்டர் கந்தசாமி' பாடலுக்கு ப்ரீத்தி சர்மா நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். சீரியலில் ப்ரீத்தி சர்மாவை சேலையுடன் பார்த்து பழகிய ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமடைகின்றனர். இந்த பாடல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி பெரும் ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.