தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளவர் மாணிக்க விநாயகம். இவர் சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அவர் உயிர்பிரிந்தது. மயிலாடுதுறையில் 1948 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமையா பிள்ளையின் இளைய மகனாக பிறந்தார். பிறப்பிலேயே இசை குடும்பம் என்பதால் இவருக்கும் சிறு வயது முதல் இசையில் அதிகளவில் நாட்டம் ஏற்பட்டுள்ளது.
இவருடைய இசை குருவாக சி.எஸ்.ஜெயராமன் இருந்துள்ளார். அவரிடம் இருந்து இசை பயின்று 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இவர் பாடியுள்ளார். அவற்றுடன் சில கிராமிய பாடல்களையும் இவர் பாடியுள்ளார். தமிழ் திரையுலகில் தில் திரைப்படத்தில் வித்யாசாகர் இசையில் கண்ணுக்குள்ளே என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமாகினார். இவருடைய குரலுக்கு என்றே தனியாக பல ரசிகர்கள் உள்ளனர். அதன்பின்னர் சுமார் 800 திரைப்பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். திரைப்பட பாடல்கள் தவிர சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி திரைப்படத்தில் தனுஷிற்கு தந்தையாக நடித்தார். அந்தப் படம் முதல் சில படங்களில் அவர் நடித்துள்ளார். கடைசியாக தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் இவர் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்தப் பாடலும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தது. அதேபோல் பக்தி பாடல்களில் இவர் விநாயகர் தொடர்பாக பாடிய பாடல் பலரின் மனம் கவர்ந்த பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவை தொடர்ந்து திரையுலகினர் மற்றும் பல ரசிகர்கள் தங்களுடைய அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: தியேட்டர் மவுசு குறையல.. இதுதான் சாட்சி.. கிறிஸ்துமஸ் நாளில் கல்லாக் கட்டிய திரைப்படங்கள்!