தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பூ ராமு. கனமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இயக்குனர்களின் முதல் தேர்வாக பூ ராமு இருந்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் பூ ராமுவுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


இந்த நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் மாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அன்பே சிவம் படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும் பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்த பூ படம் மூலமாக கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பிரபலம் ஆனார்.




பூ படத்தில் அவரது அபார நடிப்பைக் கண்ட பல முன்னணி இயக்குனர்களும் தங்களது திரைப்படங்களில் கனமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பூ ராமுவையே முதன்மைத் தேர்வாக கொண்டிருந்தனர். பூ படத்திற்கு பிறகு இயக்குனர் ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் நடித்தார். பின்னர், சீனு ராமசாமியின் இயக்கத்தில் நீர்ப்பறவை, மாரி செல்வராஜ் இய்க்கத்தில் பரியேறும் பெருமாள், கர்ணன், சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படங்களில் நடித்தார்.


குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வர் கதாபாத்திரமும், சூரரைப் போற்று படத்தில் நடிகர் சூர்யாவின் தந்தையாக இவர் நடித்த கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், பூ ராமு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.




இந்த நிலையில், சென்னையில் வசித்து வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். உரிய சிகிச்சை அளித்தும் வயது மூப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவர் காலமானார். பூ ராமுவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு என்று ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


முதலாளித்துவத்திற்கு எதிராகவும், தொழிலாளர்கள் உரிமை, மனித உரிமைகளிலும் அதிகளவில் ஈடுபாடு கொண்ட பூ ராமு தனது ஆரம்ப காலங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஈடுபடுத்தும் வகையில் வீதி நாடகங்கள், புரட்சி நாடகங்கள் ஆகியவற்றை இயக்கி நடித்துள்ளார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண