வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பிரபலங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், இப்படம் ஒரு 'பான் இந்தியா' படமாக இருக்கும் எனப் பலரும் தெரிவித்து வந்தனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கில்லி படத்துக்கு பிறகு பிரகாஷ்ராஜும் விஜயோடு சேர்ந்து இப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது தீவிர ரசிகையும் தெலுங்கு திரையுலக பிரபல நடிகையுமான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
நடிகர் விஜய்யின் 66ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு வாரிசு எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2002ல் வெளியான ‘யூத்’ படத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலான “ஆல் தோட்ட பூபதி” பாடலை ரீமிக்ஸ் செய்ய ‘வாரிசு’ படத்தின் இசையமைப்பாளர் தமன் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இருபது வருடங்களுக்கு முன்பு எப்படி இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்ததோ அதே போன்று இந்த ரீ மிக்ஸ் பாடலும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘யூத்’ படத்திற்கு இசையமைத்த மணி ஷர்மாவின் வழிகாட்டுதலின் பேரில் தமன் ரீமிக்ஸ் மூலம் அவரை கவுரவிப்பார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஜுன் 22 ம் தேதி விஜயின் பிறந்தநாளான்று தளபதி 66 படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அன்றைய நாளில் விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக அடுத்தடுத்து 3 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
இப்படம் 2023 பொங்கல் அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
''வாரிசு'' என்ற டைட்டிலுடன் தளபதி 66 படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு தலைப்புக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளன. வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் இளைய தளபதியாக உருவெடுத்த பிறகு, 2003ம் ஆண்டு வசீகரா என்ற காதல் ரொமாண்டிக் படத்தில் பூபதி என்ற வேடத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு என்ற ஆக்ஷன் படத்தில் நடித்தார். அதே ஆண்டு வேட்டைக்காரன் என்ற படத்திலும் நடித்தார். இதன் பின்னர், 2011ம் ஆண்டு வேலாயுதம் என்ற படத்தில் விஜய் நடித்தார். இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு வி ( ஆங்கிலத்தில்) வரிசையில் அதாவது வாரிசு படத்தில் நடிக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்