தெலுங்கு இயக்குநர்கள் தமிழ் படங்களை இயக்குவது தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' படத்தை இயக்கிய அனுதீப்.கே.வி, 'வாரிசு' படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி போன்ற இயக்குனர்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'வாத்தி'.



சிறந்த ஃபேமிலி கன்டென்ட் :


வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் 'வாத்தி'- என்ற தலைப்பிலும் தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பிலும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாக தயராக உள்ளது.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ப்ரிவியூ ஷோ பார்த்த பல பிரபலங்களும் எமோஷனல் பேக்கேஜாக உள்ள வாத்தி திரைப்படம் ஒரு சிறந்த ஃபேமிலி கன்டென்ட் என்றும் நிச்சயம் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடிக்கும் என பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகிறர்கள். மேலும் சென்சார் சமயத்திலும் படம் நல்ல விமர்சனங்களை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.







ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி:


சமீபத்தில் 'வாத்தி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் இப்படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக அமையும் என மிகுந்த நம்பிக்கையுடன் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து வாத்தி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.





வெங்கி அட்லூரி முழு நம்பிக்கை :

 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி "வாத்தி திரைப்படம் வெறும் இரண்டு மூன்று நாட்களில் திரையரங்கில் ஓட்டம் நிற்கும் ஒரு படம் கிடையாது. மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் இப்படத்தை பார்க்கலாம். தெலுங்கானா மாவட்டத்தில் குறைந்தது 4 வாரங்கள் வெற்றிகரமாகவும் தமிழ்நாடு மாவட்டங்களில் 8 வாரங்களுக்கும் வெற்றிகரமாக ஓடும் என மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படையாக பேசியது தனுஷ் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை  கொடுத்துள்ளது.

 

கல்வி ஒரு வியாபாரம் அல்ல என்பதை பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் சொல்லும் கதை தான் வாத்தி. இயக்குநர் வெங்கி அட்லூரி பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் விஜய் மற்றும் சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்து கலாய்த்து வருகிறார்கள்.