தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.




 சென்னையில் நடைப்பெற்ற குறும்பட விழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் வசந்த், வெங்கட் பிரபு சிம்பு தேவன் கலந்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.


இந்த விழாவில் வெங்கட் பிரபு பேசியது, “சினிமாவிற்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு முருகதாஸ் மற்றும் பிரபுதேவா மாஸ்டர் சிறந்த உதாரணம். ஹிந்தியே தெரியாமல் படம் எடுத்து வெற்றி பெற்றார்கள். ஆங்கிலம் சரியாக தெரியாமல் பாலிவுட் படம் வரை செல்கிறார்கள். ஆகவே, சினிமாவிற்கு மொழி தடையில்லை. குறும்படம் இயக்குவது மிகவும் கஷ்டம் என்று கூறினார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன். என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு குறும்படம் இயக்குவது கஷ்டம் தான். ஏனென்றால், 3 நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டும்.


தல, தளபதி ஒப்புக் கொண்டால் இருவரையும் வைத்து படம் இயக்குவதற்கு தயாராக உள்ளேன். மாநாடு படத்தில் சிம்புவிற்கு பில்ட்ப் இருக்காது. ஆனால், அவரை உயிரோட்டமுள்ள கதாபாத்திரமாக வெந்து தணிந்தது காடு படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் காட்டியிருப்பார். அப்படத்தை பார்த்து விட்டு சிம்புவை பாராட்டினேன். நாம் எப்போது அடுத்த படம் எடுக்க போகிறோம் என்று கேட்டார். அதற்காக சூழல் வரும்போது நிச்சயம் எடுப்போம் என்று கூறினேன்.


 






மேலும், எனக்கு மட்டுமில்லை எல்லா இயக்குனர்களுக்குமே ஒரு படத்தைவிட அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இயக்குனருக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. 82 வயதிலும் படம் இயக்குகிறார்கள். கோவா படத்திற்கு ஹாலிடே என்று டேக் வைத்தோம். மங்காத்தா படத்திற்கு கேம் என்று வைத்தோம். அப்படியே மாநாடு படத்திற்கு பாலிட்டிக்ஸ் என்று வைத்தோம். எல்லா படங்களுக்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மற்றும் டேக் வைப்பது வெங்கட்பிரபுவின் பாணி என்றானதால். அதைப் பின்பற்றி வருகிறேன் என்றார்"
விஜய் அஜித் ஒப்பு கொண்டால் அவர்களை வைத்து படம் எடிக்க தயார் என்று வேங்கட் பிரபு கூறியது அவரது ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.