வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலரின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கு உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 


Watch video : நடுவானில் பறக்கும் 'தி கோட்' கொடி! கனடாவை கலக்கும் தளபதி விஜய்...



'தி கோட்' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் மிகவும் பரபரப்பாக படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உலகளவில் வெளியாகும் 'தி கோட்' படத்திற்கான புரொமோஷன் தாறு மாறாக நடைபெற்று வருகிறது.






அதில் ஒன்று தான் 'தி கோட்' படத்தின் போஸ்டர் கொண்ட கொடியை கனடியன் ஸ்கைஸ் தளபதி விஜய்க்காக நடுவானில் பறக்கவிட்டு வருகிறார்கள். அதன் அசத்தலான வீடியோவை கனடாவில் செயல்படும் 'விஜய் மக்கள் இயக்கம்' அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.