Upcoming cars September 2024: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் டாடா கர்வ் (ICE) கார் உள்ளிட்டவை அறிமுகமாக உள்ளன.


புதிய வாகனங்கள் அறிமுகம்:


பண்டிகைக் காலம் தொடங்கும் முன், வாகன உற்பத்தியாளர்களால் புதிய வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்த தீவிரம் காட்டுகின்றன. இதன் மூலம், ஒருபுறம், வாகன உற்பத்தியாளர்கள் விற்பனையை அதிகரிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மறுபுறம், வாடிக்கையாளர்களும் தங்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வாகனங்களையும் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாக உள்ள, கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


டாடா கர்வ் (ICE)


Tata Motors ஆனது Tata Curvv இன் ICE பதிப்பை செப்டம்பர் 2ம் தேதி அன்று ஒரு புதிய கூபே SUV ஆக அறிமுகப்படுத்த உள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதம், இந்த SUVயின் EV எடிஷன் அறிமுகமானது. செப்டம்பர் 2 ஆம் தேதி, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடன் கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எஸ்யூவியின் மின்சார பதிப்பு ரூ.17.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் ஐசிஇ எடிஷன் சுமார் ரூ.12 முதல் 13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கொண்டு வரலாம்.


ஸ்கோடா ஸ்லாவியா மான்டே காலோ எடிஷன்:


வெளியாகியுள்ள தகவலின்படி, ஸ்கோடா செப்டம்பர் மாதத்தில் செடான் செக்மென்ட்டில் ஒரு புதிய காரையும் அறிமுகப்படுத்தக் கூடும்.  ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோவும் இந்த மாதம் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஸ்கோடா சமீபத்தில் ஒரு படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. இதில் காரின் ஹெட்லைட் காட்டப்பட்டுள்ளது. இது தற்போதைய ஸ்லாவியாவை விட அதிக சக்திவாய்ந்த இன்ஜினுடன் வரலாம்.


மெர்சிடஸ் பென்ஸ் EQS Electric


மெர்சிடிஸ் ஆடம்பர வாகனப் பிரிவில் EQS எலக்ட்ரிக் எஸ்யூவியையும் அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 5 ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. இது பல சிறந்த அம்சங்களைக் கொண்ட எலக்ட்ரிக் மேபேக் எஸ்யூவியாக இருக்கும்.இதனை  ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 600 கி.மீ வரை ஓடும் என கூறப்படுகிறது.


ஹூண்டாய் அல்காசர் ஃபேஸ்லிஃப்ட்


தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், செப்டம்பர் 9 ஆம் தேதி அல்கசார் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த எஸ்யூவியில் NFC, ADAS போன்ற சில சிறந்த அம்சங்கள் இருக்கும். தற்போதைய எடிஷனுடன் ஒப்பிடும்போது புதிய காரின் விலை சற்றே அதிகரிக்கலாம்.


JSW MG Windsor EV


JSW MG மோட்டார்ஸ் மற்றொரு மின்சார வாகனத்தை  செப்டம்பர் 11 அன்று அறிமுகப்படுத்துகிறது. இது CUV பிரிவில் கொண்டு வரப்படும். JSW MG Windsor EV இல் பனோரமிக் சன்ரூஃப், ADAS, மிகவும் வசதியான இருக்கைகள் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 460 கிமீ தூரம் வரை செல்லும். வின்ட்சர் எவ் விலை அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில் சுமார் ரூ.17 முதல் 20 லட்சம் வரை இருக்கலாம்.


டாடா நெக்ஸான் சிஎன்ஜி


டாடா நிறுவனம் இந்த மாதம் curvv இன் பெட்ரோல் மற்றும் டீசல் எடிஷன்கள் உடன்,  நெக்ஸானின் சிஎன்ஜி பதிப்பையும் அறிமுகப்படுத்தலாம். தற்போது, ​​​​நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ தகவலை வழங்கவில்லை, ஆனால் இது செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவியின் சிஎன்ஜி பதிப்பு ஏற்கனவே பாரத் மொபிலிட்டி 2024 இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI