இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடன் இயக்க இருக்கும் படத்தின் அப்டேட் வருமென மிக ஆர்வமாக காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளார்கள் ரசிகர்கள். பொங்கல் இல்லையென்றாலும் புளிசோறு அளவிற்காவது ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
நண்பன் ஒருவன் வந்தபிறகு..
ஹிப்ஹாப் தமிழா இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நடிகர் ஆதிக்கு தம்பியாக நடித்தவர் ஆனந்த். தற்போது ஆனந்த் இயக்கி நடித்திருக்கும் படம் ”நண்பன் ஒருவன் வந்த பிறகு”. குக் வித் கோமாளி பாலா, பிரபல யூடியூபர் இர்ஃபான், ஆர். ஜே ஆனந்தி என மொத்தம் இந்தப் படத்தில் 13 முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளார்கள். வாழ்க்கையில் எல்லாத் தருணங்களிலும் ஒரு மனிதனுடன் துணை நிற்கும் நண்பர்கள், அவர்களது நட்பைப் பற்றிய படமாக இந்தப் படம் இருக்கும் என்று படத்தின் இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார். காற்றின் மொழி படத்திற்கு இசையமைத்த ஏ.ஏச் காஷிப் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வைட் ஃபிலிம் ஸ்டுடியோஸ் மற்றும் மசாலா பாப்கார்ன் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளனர்.
வெங்கட் பிரபு
சென்னை 28, கோவா ,சரோஜா, மங்காத்தா, பிரியானி முதலிய படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு தனது அடுத்தப் படத்தில் விஜயை இயக்க இருக்கிறார். மாநாடு படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படம் மிகப்பெரிய படுதோல்வியை சந்தித்தது. தற்போது வெங்கட் பிரபு விஜயின் கூட்டணியை மிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
விஜய்
நடிகர் விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் தனது அடுத்தப் படத்திற்காக ஆயத்தமாகி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள் லியோ வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஸ்கின் , கெளதம் மேனன் முதலியவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.