STR | தயாராகுங்க சிம்பு ஃபேன்ஸ்! - அடுத்த வாரம் சிறப்பான சம்பவம் காத்திருக்கு !

பொதுவாக GVM படங்கள் என்றாலே வெஸ்டர்ன் , ஆங்கில உரையாடல் , காதல் என பழகிப்போன நமக்கு வெந்து தணிந்தது காடு ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என நம்பலாம்.

Continues below advertisement

கோலிவுட்டின் முக்கிய ஸ்டாராக அறியப்படுபவர் நடிகர் சிம்பு . ஏராளமான ரசிகர்களை கொண்ட சிம்புவின் நடிப்பில் இறுதியாக .. இல்லை இல்லை  மறு தொடக்கமாக உருவான திரைப்படம் மாநாடு. இந்த  படத்திற்கு கிடைத்த வெற்றி அவரை திக்குமுக்காட செய்திருக்கிறது. கூடவே அடுத்தடுத்த படங்களுக்கான பொறுப்புகளும் சிம்புவிற்கு அதிகரித்திருக்கிறது. சிலம்பரசன் தற்போது கௌதவ் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா , அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.  படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை அமைத்துள்ளார். இது சிம்புவின் 47 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement


படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. இந்த படத்தில் சிம்பு கிராமத்து இளைஞனாக , மெலிந்த தேகத்துடன் வலம் வருவார் என தெரிகிறது. பொதுவாக GVM படங்கள் என்றாலே வெஸ்டர்ன் , ஆங்கில உரையாடல் , காதல் என பழகிப்போன நமக்கு வெந்து தணிந்தது காடு ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என நம்பலாம். இந்த நிலையில்  படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீஸருக்கான தேதியை குறித்துள்ளார்களாம் படக்குழு.படத்தைவருகிற மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இது சிம்பு ஃபேன்ஸ் மத்தியில் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்சந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடங்கிய நிலையில் ட், இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நிறைவடைந்தது. சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் வெற்றி , வெந்து தணிந்தது படக்குழுவினருக்கு கூடுதல் நம்பிக்கையையும்  பொறுப்பையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola