வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "வெந்து தணிந்தது காடு" திரைப்படம். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் செப்டம்பர் 15ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

Continues below advertisement

இந்தத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்ட இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இந்த விழாவில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 

Continues below advertisement

மூன்றாவது முறை :

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிம்பு கூட்டணியில் இது மூன்றாவது படம். "விண்ணைத்தாண்டி வருவாயா", "அச்சம் என்பது மடமையடா" படங்களின் பட்டியலில் அடுத்து இணைந்துள்ளது "வெந்து தணிந்தது காடு" திரைப்படம். இந்தத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ பாடலான 'காலத்துக்கும் நீ வேணும்' பாடலும், அதனைத்தொடந்து  இரண்டாவது பாடலாக "மறக்குமா நெஞ்சம்..." என்ற பாடல் சமீபத்தில் தான் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்,  ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயிண்ட் மூவிஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

 ஏற்கனவே இந்த படத்தின் முழு பாடல்களையும் படக்குழு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது. அவை பின்வருமாறு :