தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சிட்ஷு வகை நாய்க்குட்டி ஒன்றை தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். நைக்கி என பெயரிடப்பட்ட அந்த நாய்க்குட்டியின் பிறந்தநாள் இன்று. தனது நாய்க்குட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ், நாய்க்குட்டியுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 






 


நைக்கி என்ற அந்த நாய்க்குட்டிக்கு தனியாக இன்ஸ்டாகிராம் பக்கமும் இருக்கிறது. அதற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்களும் உள்ளனர். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய்க்குட்டி நைக்கியின் க்யூட்டான பிறந்தநாள் புகைப்படங்களும் இன்று பதிவிடப்பட்டுள்ளது.


 






அந்த புகைப்படத்தில் பக்கத்தில் தனது பொம்மைகள், தலையில் பிறந்தநாள் தொப்பி என மிகக் க்யூட்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறது கீர்த்தியின் செல்ல குட்டி நைக்கி. அந்த பதிவில் ஹாப்பி பர்த்டே டு மீ  என்ற குறிப்பும் பதிவிடப்பட்டிருக்கிறது.ரசிகர்கள் அனைவரும் நடிகை கீர்த்தி சுரேஷின் செல்லப்பிராணி நைக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


ஹேப்பி பர்த்டே நைக்கி!