Vendhu Thanindhathu Kaadu: வெந்து தணிந்தது காடு என்ன ஸ்டேட்டஸ்ல இருக்கு.. அப்டேட் கொடுத்த கெளதம் மேனன்..!

வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

Continues below advertisement

வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் குறித்து இயக்குநர் கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

Continues below advertisement

‘மாநாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிலம்பரசன் `வெந்து தணிந்தது காடு’படத்தில் நடித்து வந்தார். கெளதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு  சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.

 

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குநர் கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக `வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படங்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள நடிகர் நீரஜ் மாதவ் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார். தயாரிப்பாளர் ஐசரி கே தனுஷ் தயாரித்து இருக்கும் இந்தப்படத்திற்கு சித்தார்த்தா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola