‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. 


விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார்.


 






விநியோக உரிமையை உதயநிதியின்  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் சிலம்பரசனின் நடிப்பும், ஏ.ஆர்.ஆரின் இசையும் பெரிதளவில் பாராட்டைப் பெற்றாலும், கதையின் நீளமும், இராண்டாம் பாதியில் அமைந்த சொதப்பலான திரைக்கதையும் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதை முதல் காட்சி முடிந்த உடனே பார்க்க முடிந்தது.


இதனை பல விமர்சர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அதே நேரம் சில விமர்சகர்கள் படத்தை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருந்தனர். இவற்றையெல்லாம் கடந்து ஒரு சாரருக்கு படம் பிடித்திருந்தது.


 


     


இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய கெளதம் மேனன் இந்த விமர்சனங்க பொழப்புல மண் அள்ளி போடுகிறதோ என்று தோன்றுவதாக பேசியிருந்தார்.






இந்த நிலையில் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் வசூல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்த அறிவிப்பின் படி, வெந்து தணிந்தது காடு படமானது கடந்த 4 நாட்கள் ஆன நிலையில் படம் 50. 55 கோடி வசூல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.