பல வெற்றிகரமான தமிழ் படங்களை தயாரித்த பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்தவர். இவரது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.


 



வெந்து தணிந்தது காடு:


சமீபத்தில் வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடிகர் சிம்பு நடித்த திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் பெரும் பொருட்செலவில் விளம்பரப்படுத்தப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் தான் வெளியானது. சிம்பு ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டிய இந்த கேங் ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. 


 






 


ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் :


அந்த வகையில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக  டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற படத்தில் நடிக உள்ளதாகவும் அப்படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியானது. இப்படமும் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது என்றும் 2023 சம்மர் சமயத்தில் வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.  


 






 


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லேட்டஸ்ட் அப்டேட் :


'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்' தனது அடுத்த படத்தின் தயாரிப்பை துவங்கவுள்ளது. இது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 23வது திரைப்படமாகும். இந்த படத்தின் அப்டேட் குறித்த விவரம் இன்று மாலை 6:10 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு ஒன்றினை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் வெளியிட்டுள்ளது வேல்ஸ் நிறுவனம். இந்த தகவல் திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கோமாளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, மூக்குத்தி அம்மன், எல்.கே.ஜி போன்ற பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் என்பதால் அவர்களின் தயாரிப்பில் அடுத்து உருவாகவிருக்கும் திரைப்படம் குறித்தும் அதன் இயக்குனர், நடிகர்கள் குறித்த விவரம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள் திரை ரசிகர்கள். அதுவரையில் ரசிகர்கள் தங்களின் யூகித்து கொண்டே கற்பனை வளத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.