கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை விழா தொடங்கி நடக்கவுள்ளது. இதனால் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தை காண தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் சபரிமலைக்கு வருவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பம்பைக்கு வருகின்ற நவம்பர் 17 ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி, சென்னையில் இருந்து பம்பைக்கு பிற்பகல் 3.30 மணிக்கும், 4 மணிக்கும் என 2 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதில் பெரியவர்களுக்கு ரூ.1,090, சிறியவர்களுக்கு ரூ.545 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
இந்த அதிநவீன மிதவை சொகுசு பேருந்து சேவையை வரும் ஜனவரி 18ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் இருக்கைகளை, www.tnstc.in என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல, சென்னையில் இருந்து குமுளிக்கு மாலை 5.30 மணிக்கு வழக்கமாக இயக்கப் படும் பேருந்தையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பெரியவர்களுக்கு ரூ.575, சிறியவர்களுக்கு ரூ.288 கட்டணம் வசூலிக்கப்படும்” என தெரிவித்தனர்.
சிறப்பு ரயில்கள் :
முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவிற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. இந்தவகையில் சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வழியே கொல்லத்திற்கு 3 சபரிமலை சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06061) வரும் 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18, 25 ஆம் தேதிகளில் (புதன் கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு இரவு 8.33 க்கு வந்து சேர்கிறது.
பின்னர், 2 நிமிடத்தில் புறப்பட்டு ஈரோட்டிற்கு இரவு 9.30க்கும், திருப்பூருக்கு இரவு 10.10க்கும், போத்தனூருக்கு இரவு 11.28க்கும் சென்று பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், காயங்குளம் வழியே கொல்லத்திற்கு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06062) வரும் 17, 24, டிசம் பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19, 26ம் தேதிகளில் (வியாழக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது.
கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர் சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், சென்னை எழும்பூர்- கொல்லம் வாராந்திர சிறப்பு கட் டண சிறப்பு ரயில் (06063) வரும் 18, 25 டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.33 க்கு வந்து, 2 நிமிடத்தில் புறப்படுகிறது. ஈரோடு, திருப்பூர், பாலக்காடு வழியே கொல்லத்திற்கு அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06064) வரும் 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25, ஜனவரி 1, 8,15, 22, 29 ஆம் தேதிகளில் (ஞாயிறுதோறும்) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர் சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது.
சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06065) வரும் 21, 28 டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16, 23ம் தேதிகளில் (திங்கட்கிழமைதோறும்) இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 7.33 க்கு வந்து செல்கிறது. கொல்லத்திற்கு அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம்-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06066) வரும் 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27, ஜனவரி 3, 10, 17, 24ம் தேதிகளில் (செவ்வாய்தோறும்) இயக்கப்படுகிறது.
கொல்லத்தில் காலை 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்திற்கு இரவு 8.20 மணிக்கு வந்து, பின்னர்சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் அதிகாலை 3.50 மணிக்கு சென்றடைகிறது.