வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தின் கூட்டணி குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது .


 


வெந்து தணிந்தது காடு :


தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்த பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரித்தவர். சமீபத்தில் தான் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியானது 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம். பெரும் பொருட்செலவில் உருவான இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. 


 



 


பெரும் பொருட்செலவில் உருவாகும் சிங்கப்பூர் சலூன் :


இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் எனும் தகவல் ஏற்கனவே வெளியானது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை  தொடர்ந்து தற்போது அடுத்ததாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 23வது திரைப்படம் குறித்த அப்டேட் என்று இன்று மாலை வெளியாகும் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது தற்போது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 


 






 


வேல்ஸ் நிறுவனத்தின் 23 வது தயாரிப்பு : 


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அடுத்ததாக கூட்டணி சேரப்போவது ஹிப் ஹாப் தமிழா உடன். இது ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் 7வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி ஒரு P.E.T ஆசிரியராக நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தை இயக்குகிறார். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள உள்ளார் எனும் தகவலையும் ஒரு வீடியோ ஒன்றினையும் தற்போது வெளியிட்டுள்ளனர் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வெற்றிப்படங்களாக தயாரித்து வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படைப்பு இப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.