ராபர்ட் மாஸ்டரையும் ரச்சித்தாவையும் ஏற்கனவே நெட்டிசன்கள் பலர் ட்ரால் செய்து வருகின்றனர். பற்றாக்குறைக்கு அவர்கள் சம்மந்தப்பட்ட புதிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.


டாஸ்க்கிற்காக, ரச்சித்தாவிற்கு விக்ரமன் ஹெல்மெட் அணிய உதவி செய்கிறார். இந்த காட்சியை அனைத்து போட்டியாளர்களும் எல்.ஈ.டி திரையில் பார்த்து லைவ் கமெண்ட்ரி கொடுத்து ராபர்ட் மாஸ்டரை உசுபேத்தும் வகையில் கலாய்த்துள்ளனர். அந்த வீடியோவில், “என்ன ஒரு கவனம், அடா அடா.. , லா லா லா, மாஸ்டரை பாரேன்.. வாய் பேசவே வாய்பில்லையே.. என்ன மாஸ்டர் மண்டைய மண்டையா ஆட்டிட்டு இருக்கீங்க,  தெரிஞ்சு பண்றாரா தெரியாமா பண்றாரா... மாஸ்டர் போட்டு தள்ளனுமா நான் உதவி செய்கிறேன், நோட்டீங் நோட்டீங், மாஸ்டர் நினைக்குறாரு பேசாம நம்பளும் கேப்டனாக இருக்கலாம் என்று , மாஸ்டர் உங்கள் வேதனை புரிகிறது.”என்று கேலி செய்தனர்.






அனைத்தையும் சைலன்டாக கேட்டு கொண்டிருந்த ராபர்ட் மாஸ்டர், “ அது ஒரு சாதாரண விஷயம் அதை எவ்வளவு நேரம் செய்து கொண்டிருக்கிறான்..விக்ரமன்” என்று சிரித்து கொண்டே சொன்னார். இந்த வீடியோவின் கீழ், விக்ரமன் ரச்சிதாவிற்கு உதவி மட்டும்தான் செய்கிறார். ராபர்ட் மாஸ்டர் இது ரொம்ப மோசம் என்ற கேப்ஷனை பதிவு செய்துள்ளனர்.






இதற்கு முன்பாக, இருவரும் ரொமான்ஸ் செய்யும் வீடியோவும், ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தா பின் சுற்றும் வீடியோவும் வைரலானது. இவருக்களுக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்ப்பட்டு சண்டையும் கிளம்பியது, அதை தீர்த்து வைக்க, ஷிவின் படாத பாடுபட்டார் என்பது குறிப்பிடதக்கது.


பிக் பாஸ் போட்டியாளர்கள் :




இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 16  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 


மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : ‛அவளுக்கு நடிக்கவே தெரியாது...’ நேரலையில் விளக்கம் தந்த தனலட்சுமியின் தாய்!