சுசித்ரா


கடந்த 2016 ஆம் அண்டு சுச்சி லீக்ஸ் என்கிற தலைப்பில் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்திய சுசித்ரா தற்போது மீண்டும் தமிழ் சினிமாத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த சில வாரங்களால பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வரும் அவர் கோலிவுட் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை ஆதாரமற்ற பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பிரபல நடிகர்களான விஜய் , தனுஷ் , த்ரிஷா  மற்றும் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். சுசித்ரா பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தமிழர் முன்னேற்றப் படை கட்சித் தலைவர் வீரலட்சுமி தலையிட்டு தமிழக அரசிடம் புகாரளித்துள்ளார்


விஜய் , தனுஷ்  மற்றும் த்ரிஷாவை பரிசோதனை செய்ய வேண்டும் 


தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத் துறையில் புகாரளித்துள்ள வீரலட்சுமி, சுசித்ரா தனது வீடியோவில் குறிப்பிட்ட நடிகர்களை பரிசோதனை செய்து போதைப் பொருல் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவர் சமர்பித்துள்ள கோரிக்கை மனுவில் “பிரபல நடிகர்களான நடிகர் விஜய், தனுஷ் , ஆண்டிரியா , விஜய் யேசுதாஸ் மற்றும் சுசித்ராவின் முன்னாள் கணவரான் கார்த்திக் ஆகியோர் நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடிகை நடிகைகளுக்கு கொடிய போதைப் பொருளான கொக்கைன் பயன்படுத்தியதாக சுசித்ரா கூறியுள்ளார்.  ஆதாரம் இருப்பதால் தான் சுசித்ரா இந்த நடிகர் நடிகைகள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக வெளிப்படையாக பேசியிருக்கிறார். இளைஞர்கள் கஞ்சா அடித்தால் புகார் கொடுத்த உடனே காவல்துறையினர் வந்து அவர்களை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் போதைப் பொருட்களைப் பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்தும் இடத்தில் இருக்கும் சினிமா பிரபலங்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதனால் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் பாடகி சுசித்ராவை விசாரணை மேற்கொள்ள வேண்டும். 






இன்று பல்வேறு போதைப் பொருட்களால் இளைஞர்களின் படிப்பும் வாழ்க்கையும் சீரழிந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் இப்படி போதைப் பொருட்களை பயன்படுத்தி அவர்களை காவல் துறை தண்டிக்காமல் விட்டால் இதனால் இளைஞர்கள் தாங்களும் போதைப் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கப் படுவார்கள். இதனால் சுசித்ராவை விசாரணை செய்து எந்த நடிகைகள் , எந்த நடிகர் இந்த போதைப் பொருட்களை எந்த நிகழ்வுகளில் பயன்படுத்தினார்கள். இவர்களுக்கு இந்தப் போதைப் பொருட்களை சப்ளை செய்த போதைப் பொருள் மாஃபியா கும்பல் யார் என்பதை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று வீரலட்சுமி தெரிவித்துள்ளார்