Turbo Petrol SUV: இந்திய சந்தையில் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் , முதன்மையான 3 டர்போ பெட்ரோல் எஸ்யுவிக்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.


ரூ.10 லட்சத்தில் டர்போ பெட்ரோல் எஸ்யுவிக்கள்:


டர்போ பெட்ரோல் இன்ஜின் வாகனங்கள் தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக உள்ளது. ஆனால், 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் டர்போ பெட்ரோல் இன்ஜினை கொண்ட வாகனங்கள் அதிகம் கிடைக்கப்பதில்லை. பெரும்பாலான எண்ட்ரி லெவல் எஸ்யுவிக்கள், வழக்கமான உள்-எரிப்பு இன்ஜின்களை கொண்டுள்ளன. அவற்றின் டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.  ஒரு டர்போ பெட்ரோல் இன்ஜின் வாகனமானது அதிகப்படியான எரிபொருள் செலவு இல்லாமல் அதிக செயல்திறனை வழங்குகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 3 டர்போ பெட்ரோல் வாகனங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


டாடா நெக்ஸான்:


நெக்ஸான் மிகவும் பிரபலமான சப்4எம் எஸ்யூவிகளில் ஒன்றாக உள்ளது மற்றும் அதன் புதிய அவதாரத்தில் இது ஒரு பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் விலைகளை மாற்றியமைத்துள்ளது, மேலும் நெக்ஸான் ஆரம்ப டிரிம்களுக்கும் சிறந்த மதிப்பபை கொண்டுள்ளது. நெக்ஸான் பெட்ரோலில் உள்ள இன்ஜின் 1.2லி டர்போ யூனிட் ஆகும். இது 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் ஆற்றலை உருவாக்குகிறது. அதே நேரத்தில் இந்த விலையில் கிடைக்கும் மிகவும் சக்திவாய்ந்த கார்களில் ஒன்றாகும். நெக்ஸானின் எண்ட்ரி லெவல் வேரியண்ட்களும்,  5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகின்றன. ஸ்மார்ட் மற்றும் பியூர் வேரியண்டை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறோம்.


மஹிந்திரா XUV 3XO:


மஹிந்திராவின் புதிய வெளியீடான XUV 3XO, 60 நிமிடங்களில் 50 ஆயிரம் புக்கிங்கை பெற்று  புதிய சாதனை படைத்துள்ளது.  அதன் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதன் விலை நிர்ணயமும் ஆகும். XUV 3XO மாடலின் விலை ரூ. 7.4 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் குறைந்த எடிஷன்களில் அதன் 1.2லி டர்போ பெட்ரோல் யூனிட்டின் குறைந்த சக்திகொண்ட ஐட்ரேஷனுடன் வருகிறது. இது 111bhp ஐ உருவாக்குகிறது மற்றும் MX1, MX2 PRO, MX3 மற்றும் AX5 எடிஷன்களில் வருகிறது. வாசகர்களுக்கு நாங்கள் MX3 ஐ பரிந்துரைக்கிறோம்.


மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ்:


ஃபிராங்க்ஸ் கார் டர்போ பெட்ரோலுடன் வருகிறது, மேலும் மாருதி சுசுகி சார்பில் இந்த இன்ஜின் ஆப்ஷனை கொண்ட ஒரே கார் மாடல் இதுதன். டர்போ யூனிட் 100bhp ஆற்றலை உருவாக்குகிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் வருகிறது. ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள எடிஷன்களில், மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் வாங்க விரும்புபவர்களுக்கு, டெல்டா பிளஸ் டர்போ மாடல் பரிந்துரைக்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI