நடிகர் விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் (Veera Dheera Sooran) திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 


அப்டேட் தந்த சீயான் விக்ரம்!


தமிழ் சினிமா ரசிகர்களால் வாஞ்சையாக சீயான் எனக் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விக்ரம், அடுத்ததாக எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘வீர தீர சூரன்’ எனப் பெயரிடப்பட்டு சென்ற மாதம் ஏப்ரல் 17ஆம் தேதி நடிகர் விக்ரம் பிறந்த நாளன்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதுடன், விக்ரம் மளிகைக் கடைக்காரராகத் தோன்றும் மாஸ் வீடியோ ஒன்றும் வெளியானது. 


துஷாராவுடன் ஜாலி ரொமான்ஸ்


இந்நிலையில், வீர தீர சூரன் படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார். துஷாரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், அவருடன் டிவிஎஸ் வண்டியில் போகும் படியான ஜாலியான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து சம்பவம் லோடிங் எனப் பதிவிட்டுள்ளார்.


 






நடிகர் விக்ரம் திடீரென தந்துள்ள இந்த அப்டேட் அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், நடிகர் விக்ரமின் ஆல்டைம் மாஸ் ஆக்‌ஷன் படங்களான தூள், அருள் உள்ளிட்ட படங்களைப் போல் இப்படம் கமர்ஷியல் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இணைந்த நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா


வீர தீர சூரன் படத்தை ரியா ஷிபு தயாரிக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு பணிகளையும், பிரசன்னா கே.ஜி எடிட்டிங் பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த மார்ச் மாதம் திருத்தணியில் தொடங்கியதாகத் தகவல் வெளியானது.


அதனைத் தொடர்ந்து டைட்டில் அறிவிப்பின்போது வெளியான வீடியோவில் மளிகைக் கடை சாமான்களுக்கு மத்தியில் துப்பாக்கி, தோட்டாக்களை வைத்து ரவுடிகளை அலற விடும் மாஸ் ஆக்‌ஷன் காட்சி வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. சாமானியனாகத் தோன்றும் விக்ரமின் கதாபாத்திரத்துக்குப் பின் மாஸான ஃப்ளாஷ் பேக் என்றும் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மற்றொருபுறம் தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாகக் கொண்டாடப்படும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளதும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுக்கு வில்லனாகக் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: Vijay Yesudas: மனைவியை விவாகரத்து செய்ததால் பாதிக்கப்பட்டேனா? மனம் திறந்த விஜய் யேசுதாஸ்!