தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வருபவர் விஜய் யேசுதாஸ். இவர் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸிடன் மகன் ஆவார். வித்யாசகர் இசையில் 2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'மில்லினியம் ஸ்டார்ஸ்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள விஜய் யேசுதாஸ் நடிகராகவும் அசத்தி வருகிறார். தனுஷ் நடித்த 'மாரி' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வலம் வரும் விஜய் யேசுதாஸ் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக தற்போது தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார். 


விவகாரத்தால் பாதிப்பா?


2007ம் ஆண்டு தர்ஷனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். தனித்து வாழ்ந்து வரும்  விஜய் யேசுதாஸ் முதல் முறையாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். என்னுடைய விவாகரத்து என்னை பாதித்ததை காட்டிலும் என்னுடைய குடும்பத்தை தான் அதிகம் பாதித்துள்ளது. என்னுடைய குழந்தைகள் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவர்கள் எங்கு இருந்தால் சந்தோஷமாக இருப்பார்களோ அங்கு இருக்கட்டும். விவாகரத்தால் நான் பாதிக்கப்பட்டேனா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கான காரணம் பற்றி எல்லாம் யோசிக்க எனக்கு நேரமே கிடையாது என பேசி இருந்தார். 


நடிகையுடன் உலா வரும் விஜய் யேசுதாஸ்:


இது ஒரு புறம் இருக்க விஜய் யேசுதாஸ் டேட்டிங் குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. அயல் நனல்ல, காலா, மங்களவாரம், தக்கேடேலே உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை திவ்யா பிள்ளை உடன் விஜய் யேசுதாஸ் அவ்வப்போது பொது இடங்களில் காணப்படுவது இந்த வதந்திக்கு காரணமாக அமைந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கோவிந்த் பத்மசூர்யா-கோபிகா அனில் திருமணம் விழா மற்றும் ஈகோ வோக் ஃபேஷன் ஷோ 2024 உள்ளிட்ட நிகழ்ச்சியிலும் இருவரும் கைகோர்த்தபடி கலந்து கொண்டு அவர்களுக்கு இடையே ஏதாவது இருக்குமோ என கிசுகிசுக்கப்படுகிறது. 


இதற்கு முன்னர் பின்னணி பாடகி ரஞ்சினி ஜோஸுடன், விஜய் யேசுதாஸ் கிசுகிசுக்கப்பட்டார். அந்த வதந்திகளுக்கு ரஞ்சனியே நேர்காணல் ஒன்றில் முற்றுப்புள்ளி வைத்து நிறுத்தினார். தற்போது விஜய் யேசுதாஸ் விவாகரத்துக்கு பிறகு அனைவரின் பார்வையும் விஜய் யேசுதாஸ் மற்றும் திவ்யா பிள்ளை மீது மட்டுமே உள்ளது. இருப்பினும் அவர்கள் இருவர் தரப்பில் இருந்து இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.