Maamannan: 'சாதிய மனநோயாளிகள்' .. ஃபஹத் பாசிலுக்கு சாதியை பூசி கொண்டாடியவர்களை விளாசிய வன்னி அரசு..

மாமன்னன் படத்தில் நடித்திருந்த ஃபஹத் பாசிலின் கேரக்டரை கொண்டாடுபவர்களை  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

மாமன்னன் படத்தில் நடித்திருந்த ஃபஹத் பாசிலின் கேரக்டரை கொண்டாடுபவர்களை  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார். 

Continues below advertisement

 கடந்த ஜூன் 29 ஆம் தேதி தியேட்டரில்  பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம்  வெளியானது.   உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், சுனில்  என பலரும் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் திரையுலக வாழ்வில் கடைசிப்படம் என சொல்லப்பட்டதால் பலரும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தனர்.

மாமன்னன் படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை என்ற பேச்சும் ஒரு பக்கம் உலாவிய நிலையில் அரசியல் களத்திலும் இப்படம் பலவிதமான சர்ச்சையான கருத்துகளை சந்தித்தது. இதற்கிடையில் இப்படம் கடந்த ஜூலை 27 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் படம் பார்த்த பலரும் நடிகர் ஃபஹத் பாசிலின் காட்சிகளை மட்டும் தனியாக எடிட் செய்து சினிமாவில் இடம் பெற்ற சாதிய பின்னணியிலான பாடல்களை ஒலிக்க விட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். 

இது இணையவாசிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. வில்லனாக சித்தரிக்கப்பட்ட ஃபஹத் பாசிலின் ரத்னவேல் கேரக்டரை ஹீரோவாக குறிப்பிட்ட சிலர் கொண்டாடி வருவது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது  படம் எடுத்ததற்கான நோக்கத்தை சிதைத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு  இத்தகைய ஃபஹத் பாசில் வைரல் வீடியோக்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ எச்சரிக்கை என்ற கேப்ஷன் இடம் பெற்றுள்ளது. மேலும், “மாமன்னன் திரைப்படம் வெளிவந்ததிலிருந்து சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு,என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள். அப்புறம் தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர்.

இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர்.அதாவது,நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர்.அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப்பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம் தான். ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது.சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola