லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ,விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையன்று ரிலீஸானது. கொரோனா பரவல் பயத்துக்கு மத்தியிலும் படம் வெளியாகி 50-ஆம் நாள் கொண்டாட்டம் வரை சக்கைபோடு போட்டது மாஸ்டர். லாக்டவுன் முடக்கத்துக்குப் பிறகு, ரசிகர்கள் பலரை மீண்டும் திரையரங்கிற்கு அழைத்துவந்தது மாஸ்டர் திரைப்படம்தான். திரைப்படத்துக்கு முன்பாகவே வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டப்பட்ட வாத்தி கம்மிங்தான் இப்போதும் பலருக்கு ரிங்டோன்.


கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள் வரை இன்ஸ்டாகிராம் ரீலிலிலும், IGTV-இலும் கொண்டாடப்பட்ட இந்த பாடலுக்கு தினம் ஒரு மகுடம் சூட்டப்படுகிறது. தற்பொழுது வாத்தி கம்மிங் பாடல் இணையத்தில் 100 மில்லியன் வியூஸ்களைத் தாண்டி பெரும் சாதனை படைத்துள்ளது , விஜய் ரசிகர்கள் இந்த சாதனையை ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.


விஜய்யின் நடனமும், அனிருத்தின் இசையும் பாடலை வேறு ஒரு பரிணாமத்திற்கு எடுத்து சென்றதை வாட்சப் ஸ்டேஸில் வைத்து ஸ்டேட்டஸ் ட்ரெயின் விடுகிறார்கள் ரசிகர்கள். மீண்டும் விஜயை வைத்து லோகேஷ் மற்றொரு படம் எடுக்கச் சொல்லி ரசிகர்களிடம் இருந்து டீவீட்டுகள் பறந்த வண்ணம் உள்ளன.