தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்தாண்டு பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை காரணமாக 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இன்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு உத்தரவிட்டது. 
இந்த நிலையில், 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்றி தேர்ச்சி அளித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று நந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 




இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள்,   பொது நல விஷயங்களில் அதிகாரிகள் ஆலோசனையின்பேரிலே அரசு முடிவு எடுக்கும்.11ம் வகுப்பு மாணவர்களின் தகுதியை கண்டறிய தேர்வுகளை வேண்டும் என்றால், அந்தந்த பள்ளிகளே நடத்திக் கொள்ளலாம். 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டும். பொதுத்தேர்வை ரத்து செய்தது தொடர்பாக அரசு ஆலோசிக்கவில்லை என்ற வாதத்தை ஏற்கமுடியாது. எனவே, 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்