நடிகர் கார்த்திக் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி..!


நடிகர் கார்த்திக் சனிக்கிழமை மாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கார்த்திக் பாஜக-அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார், சனிக்கிழமை  இந்த சம்பவம் நடந்தபோது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருந்தார். மூச்சு திணறல் காரணமாக அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப சிகிச்சை மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, அவரிடம் கோவிட் -19காண எந்த அறிகுறியும் இல்லை என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது .


பிரபல மற்றும் மூத்த நடிகர் தற்போது ஹிந்தியில் பெரிய அளவில் ஹிட்டான அந்தகனில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது, அதை தொடர்ந்து தீ இவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன . இந்த நிலையில் நடிகர் கார்த்திக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.