ஓடிடியில் களமிறங்கு வசந்தபாலன்


உயிரோட்டமுள்ள பல படங்களை வழங்கியவர் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, ஜெயில், அநீதி எனத் தொடர்ச்சியாக எளிய மனிதர்களை தன் படங்களின் நாயகர்களாக வைத்து கதை சொல்லி வருகிறார். காவியத் தலைவன், அரவான் உள்ளிட்ட வரலாற்று பின்ணிகள் கொண்ட படங்களையும் இயக்கியுள்ளார். சமீப காலத்தில் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் மற்றும் அநீதி ஆகிய படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போத் ஓடிடியில் களமிறங்கியிருக்கிறார் வசந்தபாலன்.


பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் ஓடிடி தளங்களில் தொடர்ச்சியாக படங்களையும் தொடர்களையும் இயக்கி வருகிறார். ஆனால் தமிழைப் பொறுத்தவரை முன்னணி இயக்குநர்கள் ஓடிடி தளங்களுக்காக படங்களையோ தொடர்களை இயக்குவதில் அதிக முனைப்பு காட்டுவதில்லை.  ஓடிடி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சட்டகத்திற்குள் தங்களுக்கு ஒரு கதையை இயக்க விருப்பமில்லை என்பது படைப்பாளிகளில் கருத்தாக இருக்கிறது. வசந்தபாலன் போன்ற முன்னணி இயக்குநர்கள் ஓடிடி தளங்களுக்காக முழு நீள இணையத் தொடர்களை இயக்குவது ஒரு நல்ல நகர்வாக பார்க்கப்படுகிறது.


தலைமைச் செயலகம்


ஜீ ஃபைவ்  நிறுவனம் தயாரித்து வரும் மே 17ஆம் தேதி வெளியாக இருக்கும் வெப் சீரீஸ் ‘தலைமை செயலகம்’. ஜெயமோகனின் கதைக்கு வசந்தபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பரத், ரம்யா நம்பீசன், கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், நந்தா குப்தா, சாரா பிளாக் சித்தார்த் விபின், சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்டவர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தலைமைச் செயலகம் வெப் சீரிஸின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


அரசியல் களத்தை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாகியுள்ளது. முன்னதாக அரசியலை மையமாக வைத்து ஓடிடி தளத்தில் வெளியான குயின் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தற்போது தலைமை செயலகம் தொடரின் ட்ரெய்லர் பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் சுவாரஸ்யமான கதைப் பின்னலை கொண்டிருக்கும் என்று நம்பும் வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது.






ஊழல், அதிகாரத்திற்கான போட்டி அதனை தக்கவைத்துக் கொள்ள நடக்கும் சூழ்ச்சிகள், மக்கள் போராட்டம் எனப் பல்வேறு தரப்புகளை இந்தத் தொடரில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.