New Swift 2024 vs Old Swift Comparision: மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் கார் மாடலானது, பழைய மாடலை காட்டிலும் கூடுதலாக 3 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024:
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட் கார், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை, 6 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் டோன் மற்றும் டபுள் டோன் என மொத்தம் 9 வண்ண விருப்பங்களில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, சுமார் 26 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கார் மாடலினொவ்வொரு வேரியண்டின் விலை விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
விலை விவரங்கள்:
வேரியண்ட் | மேனுவல் | ஆட்டோமேடிக் |
LXI | ரூ.6,49,000 | - |
VXI | ரூ.7,29,500 | ரூ.7,79,500 |
VXI (0) | ரூ.7,56,500 | ரூ.8,06,500 |
ZXI | ரூ.8,29,500 | ரூ.8,79,500 |
ZXI பிளஸ் | ரூ.8,99,500 | ரூ.9,49,500 |
ZXI பிளஸ் டியூயல் டோன் | ரூ.9,14,500 | ரூ.9,64,500 |
புதிய ஸ்விஃப்ட் Vs பழைய ஸ்விஃப்ட்:
புதிய மாடலானது 1.2-லிட்டர் 3-சிலிண்டர் மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் உடன் 81.6PS ஆற்றலையும் 112Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. புதிய ஸ்விஃப்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் லிட்டருக்கு 24.80 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் 25.75 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்விஃப்ட் உடன் ஒப்பிடும்போது, புதிய மாடல் அதிக செயல்திறன் கொண்டது. புதிய டிரான்ஸ்மிஷனைப் பொறுத்து 3.34 - 3.16kmpl மைலேஜில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குகிறது. இந்த புள்ளிவிவரங்கள் பழைய ஸ்விஃப்ட்டை விட சுமார் 14-15% அதிகம்.
மாடல் | புதிய ஸ்விஃப்ட் | பழைய ஸ்விஃப்ட் |
இன்ஜின் | 1.2 லி மைல்ட்-ஹைப்ரிட் மாடல் | 1.2லி சாதாரண மாடல் |
சிலிண்டர் | 3 | 4 |
பவர் | 81.6PS @ 5700rpm | 83PS @ 6000rpm |
டார்க் | 112Nm @ 4300rpm | 113Nm @ 4200rpm |
மேனுவல் | 5 ஸ்பீட் | 5 ஸ்பீட் |
மேனுவல் மைலேஜ் | 24.80 கிமீ/லிட்டர் | 22.38 கிமீ/லிட்டர் |
ஆட்டோமேடிக் | 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் | 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் |
ஆட்டோமேடிக் மைலேஜ் | 25.75 கிமீ/லிட்டர் | 22.56 கிமீ/லிட்டர் |
அனைத்து புதிய வேரியண்ட்களுக்குமான நிலையான அம்சங்கள்:
- 6 ஏர் பேக்குகள்
- அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள்
- அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் நினைவூட்டல்கள்
- மின்னணு நிலைத்தன்மை திட்டம் (ESP)
- ஹில் ஹோல்ட் அசிஸ்ட் (HSA)
- ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS)
- எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (EBD)
- பிரேக் அசிஸ்ட் (BA)
Car loan Information:
Calculate Car Loan EMI