தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த நவம்பர் 1ம் தேதி இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.


இத்தாலியில் திருமணம் :


இத்தாலியில் டஸ்கனில் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி கனவுத் திருமணம் இருவீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் டோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள கோலாகலமாக நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தன.


 


Varun Tej - Lavanya: ஓடிடிக்கு விற்கப்பட்ட வருண் தேஜ் - லாவண்யா திருமண வீடியோ.. அடேங்கப்பா.. இத்தனை கோடிகளா?


வைரல் கிளிக்ஸ்:


வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் வைபவத்தில் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன், பவன் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் திருமண தம்பதிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்தது.


மேலும் இந்த புதுமண ஜோடிகளின் ரிசெப்ஷன் வரும் நவம்பர் 5ம் தேதி ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்விலும் ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2023ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.  


 

 

 

ஓடிடியில் ஸ்ட்ரீமிங் :


அதனைத் தொடர்ந்து வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணத்தின் வீடியோ பிரத்யேகமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது என்றும், அதற்கான ஸ்ட்ரீமிங் உரிமையை அவர்கள் 8 கோடிக்கு பெற்றுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற தங்களின் பேவரட் ஸ்டார்களின் திருமணத்தை ஓடிடியில் கண்டு ரசிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் அவர்களின் ரசிகர்கள். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை நெட்பிளிக்ஸ் அல்லது திருமண தம்பதியினர் தரப்பில் இருந்து இதுவரையில் வெளியாகவில்லை.  

நயன் - ஹன்சிகா :


இதற்கு முன்னர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்ய உரிமையை பெற்றது. ஆனால் சில ஒப்பந்த மீறல் காரணமாக ஸ்ட்ரீமிங் ஒப்பந்தம் தற்போது நிலுவையில் உள்ளது.

அதே போல ஹன்சிகா மோத்வானி - சோஹைல் கதுரியா திருமண வைபவத்தின் வீடியோ "லவ் ஷாதி டிராமா" என்ற பெயரில்  டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது.

அவர்களைத் தொடர்ந்து தற்போது வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுமா என்பதை தெரிந்து கொள்ள அவர்களின் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். டோலிவுட் திரையுலகில் இந்தத் தகவல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.