இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார்.  இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். 


வாரிசு படத்தின் பாடல்கள் அனைத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தநிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அனைவரும் எதிர் பார்த்து கொண்டிருக்கும் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. அதற்கேற்றவாறு, தற்போது வாரிசு படத்தின் ட்ரெய்லரானது சன் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியாகி, 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. 


இந்தநிலையில், தற்போது வெளியான வாரிசு படத்தின் ட்ரெய்லரில் முழுக்க முழுக்க அரசியல் வசனங்களை விஜய் பேசியதாக இணைத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த அரசியல் கருத்துகள் அனைத்தும் நடிகர் விஜய் விரைவில் அரசியல் வருவதற்கான சான்றுகளும் என்றும் கூறப்படுகிறது. 


அப்படி என்ன விஜய் அரசியல் வசனம் பேசினார் என்பதை கீழே பார்ப்போம்.. 


வாரிசு ட்ரெய்லரில் விஜயை இன்ட்ரோ செய்யும்போது, விஜய்க்கு பின்னணியில் ’வா தலைவா, தலைவா என்றும் நீ உனக்கே தலைவா என்று நகர்கிறது. தொடர்ந்து, அடுத்த சில நொடிகளில் எல்லா இடமும் நம்ம இடம்தான் என்று சினிமாவை தொடர்ந்து அரசியலுக்கான இடத்தை குறிவைக்கிறாரா என்று கேள்வி எழுகிறது. 


”போய் உங்க அப்பன்கிட்ட சொல்லு இந்த சீட்டோட ஹூட் என்னன்னு இனிமேதான் தெரியும்” என்று பிரகாஷ் ராஜ் விஜயை பார்த்து கூற, அதற்கு பதிலளிக்கும் விஜய், ” பவர் சீட்ல இருக்காது சார், அதுல வந்து ஒருத்தன் உட்காருரான்ல அவன்ட்டதான் இருக்கும். நம்ம பவர் அந்த ரகம்” என்று தெரிவிக்கிறார். இதன்மூலம் வருங்கால தமிழக முதலமைச்சர் சீட் குறித்து விஜய் பேசுகிறாரா ? என்று கேள்வி எழுகிறது. 


அடுத்ததாக பிரகாஷ் ராஜ் விஜயிடம், இனிமேதான் அடிமேல, அடிமேல, அடிமேல, அடிமேல அடி விழுந்துட்டே இருக்கும் தெரிவிக்க, அப்போது விஜய் அதிரடியாக, “ மாமே! அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடுக்கணும். ஏன் சொல்லு, நீ எத கொடுத்தாலும் நான் டிரிப்ள் மடங்கு திருப்பி கொடுப்பேன். உனக்கு தெரியாதுல என்ன பத்தி” என்று தான் இதுவரை சந்தித்த பிரச்சனைகள், அதற்காக விஜய் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என அனைத்தையும் முன்வைக்கிறார். 


”கிரௌண்ட் மொத்தமும் உன் ஆளுங்க இருக்கலாம். ஆனா ஆடியன்ஸ் மொத்தமும் ஒரு ஆள மட்டும்தான் பார்ப்பாங்க. கேள்விபட்டு இருக்கியா? ஆட்டநாயகன்” என்று தன் தற்போது இருக்கும் இடம் குறித்து விஜய் பேசுகிறார். 


 விஜய் எதிர்ப்பாளர்கள் ட்விட்டரில் #குடும்பத்தைகவனிங்கவிஜய் என்று கருத்து தெரிவித்து வந்தனர். கடந்த சில வருடங்களாகவே விஜய் மற்றும் அவரது தந்தை உடனான கருத்து வேறுபாடு இருப்பது நாம் அறிந்ததே. அதற்கு வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் மூலமாக விஜய் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், குடும்பம்னா குறை இருக்கம்தான். ஆனா நமக்குன்னு ஒரு குடும்பம்தான இருக்கு” என்று விஜய் திரும்பி இருக்கும் சீன்னோடு வாரிசு ட்ரெய்லர் முடிவடைகிறது.