Kia கார் நிறுவனம் கடந்த மாதம் வருடாந்திர வளர்ச்சியாக (Y-o-Y) 94.7 சதவிகிதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 3.36 லட்சம் யூனிட் கார்களை விற்றது குறிப்பிடத்தக்கது.


கியா நிறுவனத்தின் வளர்ச்சி


கியா நிறுவனம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது முதல் பெற்றுள்ள அபரிமிதமான வளர்ச்சி, எல்லா நிறுவனங்களையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டின் விற்பனை ஸ்டேடிஸ்டிக்ஸ் எடுத்து பார்த்தால் வருடாந்திர வளர்ச்சியில் பெரும்பாலான மாதங்களில் 90 சதவிகிதங்கள் பதிவு செய்து பெரும் விற்பனை சாதனையை செய்துள்ளது. ஆகஸ்ட் 2019 இல் இந்தியாவில் விற்பனையை துவங்கிய கியா இந்தியா ஒட்டுமொத்தமாக எட்டு லட்சம் கார்களை விற்றுள்ளது. கடந்த மாதம் அதாவது 2022 டிசம்பரில் இந்த நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 15,184 யூனிட்களின் விற்பனையைப் பதிவுசெய்தது. இதன்மூலம் வருடாந்திர (Y-o-Y) வளர்ச்சி 94.7 ஆக பதிவாகியுள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் விற்பனை 94.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.



வருடாந்திர வளர்ச்சி


கியா இந்தியா 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 3,36,619 கார்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த நிறுவனத்தின் விற்பனை 47.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தில் உள்நாட்டு விநியோகங்கள் எண்ணிக்கை 2,54,556 யூனிட்களாக பதிவாகி உள்ளது. அதன் வளர்ச்சி 40.1 சதவிகிதமாக உள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி 82,063 யூனிட்களாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்: ஆன்லைன் மூலம் ஆதாரில் முகவரியை மாற்றும் புதிய வசதி.. எவ்வாறு? விதிமுறைகள் என்ன? முழு விவரம்..


எந்தெந்த கார்கள் அதிக அளவில் விற்றுள்ளன


வருடாந்திர விற்பனையைப் பொறுத்தவரை, கியா செல்டோஸ் வகை கார் மட்டும் 1,01,569 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது, அதே நேரத்தில் கியா சோனெட் 86,251 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. Carens 62,756 யூனிட் விற்பனையை பதிவு செய்தது. அதே நேரத்தில் கார்னிவல் மற்றும் EV6 முறையே 3,550 மற்றும் 430 யூனிட்கள் விற்பனை ஆகு உள்ளது. கியாவின் வலுவான செயல்திறன் குறித்து, Kia India, VP மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர், ஹர்தீப் சிங் ப்ரார் பேசியுள்ளார். 



ஹர்தீப் சிங் ப்ரார்


இது குறித்து பேசிய அவர், "2022 ஆம் ஆண்டு பல வழிகளில் Kia இந்தியாவிற்கு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. இந்தியர்களின் அன்பும் ஆதரவும் பிரமிக்க வைத்துள்ளது. புவிசார் அரசியல் சிக்கல்கள், கோவிட் விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் விலை உயர்வு போன்ற பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், கியா நிறுவனத்தால் அதிகபட்ச விற்பனையை பதிவு செய்ய முடிந்தது. கியா தயாரிப்புகள் இந்தியாவில் அந்தந்த பிரிவில் மற்ற நிறுவன கார்களின் விற்பனையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், பெரும் அலைகளை உருவாக்கி, சர்வதேச சந்தைகளில் எப்போதும் வளர்ந்து வரும் தேவையையும் உருவாக்குகிறது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்திய வாடிக்கையாளர்களுக்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம் 2022 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்தது. 2023க்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது, மேலும் நாங்கள் எப்போது வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதிலும், அவர்களுக்கு எங்களின் புதிய கால நகர்வு தீர்வுகளை கொண்டு வருவதிலும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.


Car loan Information:

Calculate Car Loan EMI