ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் "வாரிசு" திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த முழு நீள ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

Continues below advertisement

 

Continues below advertisement

இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் எஸ். தமன். இப்படத்தின் அப்டேட்கள் சரவெடி போல அவ்வப்போது வெளியாகி நடிகர் விஜயின் ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  

ஆடியோ உரிமை 5 கோடிக்கு விற்பனை :

டி-சீரிஸ் மியூசிக் லேபிள் நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைவரான பூஷன் குமார் மற்றும் தில் ராஜு இருவரும் இணைந்து  "வாரிசு" திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை நடைபெற்ற பிரஸ் மீட்டில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் பூஷன் குமார். பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இந்த குடும்ப என்டர்டெயின்மென்ட் திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். மேலும் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி படங்களில் பாடல்களுக்கு முக்கிய பங்கு இருக்கும். இப்படத்திற்காக இசையமைப்பாளர் எஸ். தமன் அற்புதமான டியூன்களை அமைத்துள்ளார். இந்த கூட்டணி நிச்சயமாக ஒரு மேஜிக்கல் மியூசிக்கை உருவாக்கும் என்றார் பூஷன் குமார். 

 

 

ஃபர்ஸ்ட் சிங்கள் என்று வெளியாகிறது :

டி-சீரிஸ் மியூசிக் லேபிள் நிறுவனம் "வாரிசு" திரைப்படத்தின் ஆடியோ உரிமையை 5 கோடிக்கு பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பாடல்களை வெளியிடும் உரிமையை இந்த நிறுவனமே கைப்பற்றியுள்ளது என தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள். மேலும் வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளனர். 

 

 

நேரடியாக மோதும் விஜய் vs அஜித் :

இப்படத்தில் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஷாம் மற்றும் ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கும் "வாரிசு" திரைப்படத்துடன் நேரடியாக மோத உள்ளது நடிகர் அஜித்குமாரின் "துணிவு" திரைப்படம். இந்த இரண்டு திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் ஆனந்தமாக உள்ளனர்.