Cinema Round-up: வாரிசு இசை வெளியீட்டு விழா; நயனின் ‘கனெக்ட்’ விமர்சனம்..துணிவு தெலுங்கு டைட்டில் - விறுவிறு சினிமா செய்திகள்!
'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டை முன்னிட்டு சுறுசுறுப்பாக வேலைகள் நடந்து கொண்டிருக்க, தெலுங்கு டைட்டிலை துணிவு படக்குழு வெளியிட்டது.

வெளியானது நயன்தாராவின் கனெக்ட்

Just In




இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள படம் ‘கனெக்ட்’. அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்த ஹாரர் திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்; இப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது; இப்படம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் பத்திரிக்கை மற்றும் பிரபலங்களுக்கான ஸ்பெஷல் ஷோ திரையிடப்பட்டது. அதில் நயனும் விக்கியும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
விஷால் நடித்த லத்தி ரீலிஸானது
ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் டிசம்பர் மாதம் 22ம் தேதியான இன்று ‘லத்தி’ படம் வெளியாகிவுள்ளது. இப்படத்தில் நடிகர் விஷால் ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர் ஆர் ஆர் படத்தின் பாடல்
அகாடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 95வது நிகழ்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம், நடிகர்கள், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதானது வழங்கப்படுகிறது. அதில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடல் இடம் பெற்றுள்ளது.
வாரிசு இசை வெளியீட்டு விழா
இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. வாரிசு படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வர விருக்கிறது.இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழில் துணிவு தெலுங்கில் தெகிம்பு
அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்திற்கு தெலுங்கில் ‘தெகிம்பு’ என பெயரிடப்பட்டுள்ளது.
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தின் வெற்றிக்குப் பிறகு, அஜித் குமார், எச்.வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோர் மூன்றாவதாக துணிவு மூலம் ஹாட்ரிக் வெற்றியை ரசிகர்களுக்கு தர இருக்கின்றனர்.
அத்துடன், மூன்றாவது சிங்கிள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேங்ஸ்டா என்ற ஹேஷ்டாகை குறிப்பிட்டு, சிங்கபூரை சேர்ந்த பாடகரான சபீரையும் டேக் செய்துள்ளார். இதன் மூலம் அப்பாடலை சபீர் பாடியுள்ளார் என கூறப்படுகிறது.