Share Market opened : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி உள்ளது.


இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 397.14 புள்ளிகள் உயர்ந்து 61,464.38 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 119.65 புள்ளிகள் உயர்ந்து 18,318.75 புள்ளிகளாக உள்ளது.






சீனாவில் கொரோனா தாக்கம்


சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை 2023-ஆம் ஆண்டில் உருவாகும், அமெரிக்காவுக்கும் 2023-ஆம் ஆண்டில் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்கிறது என்ற தகவலும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. மேலும் சீனாவில் கொரோனா வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் இன்னும் கொரோனா தாக்கம் குறையாதது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.


லாபம் - நஷ்டம்


சர் பார்மா, இன்போசிஸ், சிப்ளா, அப்போலோ மருத்துவமனை, அதாணி போர்ட்ஸ், கோடக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், கிராசிம், எச்சிஎல் டெக், பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், எச்டிஎப்சி வங்கி, விப்ரோ, ஐசிஐசிஐ வங்கி,  டெக் மகேந்திரா, எஸ்பிஐ, பிரிட்டானியா, டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், மாருதி சுசிகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


பஜாஜ் பின்சர்வ், பிபிசிஎல், கோல் இந்தியா, ஹின்டல்கோ, எம்எம், லார்சன், டாடா ஸ்டீல், என்டிபிசி, நெஸ்டீலே, ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.


ரூபாய் மதிப்பு: 







இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 10 காசுகள் உயர்ந்து 82.74 ரூபாயாக ஆக உள்ளது.