வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மாஸாக எண்ட்ரி கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில்,  ஏற்கனவே இப்படத்தில் இருந்து  ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனிடையே இன்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகள் மூலம் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் நேரு உள்விளையாட்டரங்கில் குவிந்தனர். இதில் சில ரசிகர்களுக்கு பாஸ் கிடைக்காத நிலையில் அவர்கள் தடையை மீறி உள்ளே வந்தனர். இதனால் அவர்களை தடுக்க முயன்ற போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே சென்றதால், போலீசாரில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. 

 
இந்நிலையில் வாரிசுப்படக்குழுவினர், நடிகர் விஜய்யின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் வந்துள்ள நிலையில், கிரே கலர் சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் மாஸ்ஸாக விஜய் எண்ட்ரி கொடுத்துள்ளார்.  அவர் வரும் போது பின்னணியில் வாரிசு படத்தில் இடம் பெற்ற தீ தளபதி பாடல் ஒலிபரப்பப்பட்டது.  விஜய் வருகை தந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.