பொங்கல் ரிலீஸாக விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்புடன் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. வாரிசு மற்றும் துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் வசூல் நிறுவனம் தற்போது வெளியாகியுள்ளது. 


 



 


துணிவு FDFS வசூல் எவ்வளவு ?


குடும்ப சென்டிமென்டை மையமாக வைத்து 'வாரிசு' திரைப்படமும் சமூக அக்கறையுள்ள கருத்துக்களை ஆக்ஷன் ஜானரில் வெளிப்படுத்தியுள்ளது 'துணிவு' திரைப்படம் என்றும் ரசிகர்கள் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். அஜித்தின் 'துணிவு' திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்படுமா இல்லையா என்ற குழப்பத்திற்கு நடுவில் ரத்து செய்யப்பட்ட காட்சிகளும் கடைசி நேரத்தில் திரையிடப்பட்டது. மிகுந்த சந்தோஷத்தில் இருந்த அஜித் ரசிகர்கள் துணிவு திரைப்படத்தை கொண்டாடினர். இதற்கு முன்னர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியும் வசூலும் பெறாததால் துணிவு திரைப்படம் மேல் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. துணிவு படத்தின் FDFS  12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 






 


வாரிசு படத்தின் நிலவரம் :


அந்த வகையில் விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. மிகுந்த ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தின் FDFS 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வசூல் நிலவரத்தின் படி வாரிசு படத்தை விடவும் துணிவு திரைப்படம் 2 கோடி அதிகமாக பெற்று முன்னிலை வகிப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். 


 






 


தொடர்ந்து எந்த திரைப்படம் முன்னிலை வகிக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.