நடிகர் சரத்குமார் வாரிசு படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பேசி இருக்கிறார். 

Continues below advertisement


நடிகர் சரத்குமார் பேசும் போது,  “ வாரிசு படம் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. ஆடியன்ஸ் படத்தோடு கனெக்ட் ஆகும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.விஜயின் பெர்பாமன்ஸ் வேறு லெவலில் இருக்கிறது. அதை அருகில் இருந்து பார்க்கும் எனக்கு கிடைத்துள்ளது.


விஜயின் டைமிங் சென்ஸ், அவரது ஒழுக்கம் எல்லாவற்றையும் நான் பார்க்கிறேன். வாரிசு கம்ப்ளீட் எண்டெர்டெயினராக இருக்கும். சாங்ஸ், ஃபைட், உறவு என எல்லாஎமோஷனும் இந்தப்படத்தில் இருக்கும்” என்று பேசினார். 


 






தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும்  விஜய் தற்போது இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் இயக்கத்தில் "வாரிசு" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. படத்திற்கான அடுத்த ஷூட்டிங் ஷெட்யூல் வைசாக்கில் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த ஷெட்யூலின் படி விஜய் நடிக்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டும் என்று தகவல் தெரிவிக்கின்றன. 


 






வாரிசு திரைப்படத்தில் ரொமான்ஸ், ஆக்‌ஷன், காமெடி, அதிரடி, செண்டிமெண்ட் என அனைத்தின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கமர்சியல் திரைப்படம். சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இது ஒரு திரை விருந்தாக அமையும். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிவடைந்து 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, வாரிசு படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. 







வாரிசு திரைப்படத்தில் விஜயின் ஜோடியாக இணைகிறார் ராஷ்மிகா மந்தனா. இப்படம் ஒரு முழுமையான தமிழ் படம் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என்கிறார்கள் பட குழுவினர். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சங்கீதா, பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷியாம் உள்ளிட்ட ஒரு பெரிய திரை பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கள் ட்ராக் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.