கன்னியாகுமரியில் இளம்பெண் தற்கொலை வழக்கில் இரண்டாவது காதலன் கைது செய்யப்பட்டார். 

 

கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சத்தியராஜ் -இந்திரா தம்பதி இளைய மகள் திவ்யா 20. பிஏ படித்து விட்டு உயர் படிப்பிற்காக விண்ணப்பித்திருந்த திவ்யா சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.  ரஞ்சித் ரோமியோவாக சுற்றுவதும் துப்பாக்கி ரஞ்சித் என்ற பேஸ்புக் ஐடியுடன் சிஆர்பிஎப், ஆர்மி என ஐடி வைத்துவிட்டு வெட்டியாக எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிவருவதையும் ஊரில் வம்பிளுப்பதையும் வாடிக்கையாக கொண்டிருப்பதை பார்த்த திவ்யா ரஞ்சித்தை பிரேக்கப் செய்துள்ளார.  ரஞ்சித்தோ பின் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கவே காவல்நிலையம் சென்று புகார் அளித்தும் டார்ச்சர் தொடர்ந்துள்ளது. இதனிடையே இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற படங்களும் சமூக வளைதளங்களில் பரப்பியதால் மேலும் ரஞ்சித் மீது வெறுப்படைந்த திவ்யா சோகத்தோடு காணபட்டார்.

 



 

 

இந்நிலையில் இதுகுறித்து திவ்வியாவின் சகோதரன்மேத்யூ மற்றும் நண்பர்கள் ரஞ்சித்திடம் தட்டி கேட்கவே ரஞ்சித் நண்பர்களுடன் சேர்ந்து மேத்யூ மற்றும் அவர்களது நண்பர்களை தாக்கி உள்ளார். இந்த நிலையில் மனமுடைந்த திவ்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய மார்த்தாண்டம் போலீசார் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திவ்யாவின் செல்போனை ஆய்வு செய்த போது செல்போனில் திவ்யா தோப்புவிளை இனயம் செரின்புரூஸ் 19 என்பவரிடம் அதிகம் நேரம் பேசியது குறுஞ்செய்தி வாட்ஸ் அப் சாட்டிங் என அதிக அளவில் இருந்துள்ளது. இதனடிப்படையில் அவரை பிடித்து விசாரித்த போது ரஞ்சித் காதல் பிரச்சனைக்கு ஆறுதல் கூற வந்து இரண்டாவது காதலனாக மாறியுள்ளார் .

 



 

 

திவ்யாவின் இரண்டாம் காதல் ஆறுதலாக போய் கொண்டிருக்கும் நிலையில் திடீரென செர்லின் ரஞ்சித்துடன் தொடர்ந்து, நீ தொடர்பில் இருக்கிறாயா என்ற சந்தேகம் எழவே அதை கேட்டு திவ்யாவை டார்ச்சர் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று ரஞ்சித்தும் அவன் கிடைத்ததால் என்னை விட்டு சென்றாயா என கூறி டார்ச்சர் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இருவரின் டார்ச்சரால் திவ்யா தற்கொலை செய்து கொண்ட தாக போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில் செர்லின் புரூசை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.




தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 


கடந்த 5 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இருந்து வருகின்றது.


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050