திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வள்ளி குகை கோவில் செல்லும் நடைபாதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன்  5 மணி நேரமாக சிறப்பு யாகம் நடத்துவதால் வள்ளி குகை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அனுமதியின்றி சாலை மறியல் செய்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.




அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் பல்வேறு யாகங்கள் வளர்ப்பது வழக்கம். தமிழகத்தில் இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன்  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கடந்த 2 ஆம் தேதி  அதிகாலை வள்ளி குகை செல்லும் நடை பாதையை மறித்து சத்ரு சம்கார லட்சார்ச்சனை ஹோமம் நடத்தினார். இதனால் பக்தர்கள் வள்ளி குகைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.




இதனால் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரமாக காத்திருந்தனர். வெகுநேரம் காத்திருந்த பக்தர்கள் கோவில் தனியார் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் பூமி பூஜை நிகழ்ச்சியில் இந்து அர்ச்சகரை கொண்டு பூஜை செய்வதற்காக அதிகாரிகள் மீது கோபம் கொண்டு திட்டினார்.




திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மதத்தினரும் சமம் என்றும் பூமி பூஜை நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரையும் அழைத்து நடத்த வேண்டும் என அதிகாரி மீது கோபம் கொண்டார். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பரிகார பூஜைக்காக இந்து அர்ச்சகர்கள் கொண்டு தனியாக யாகம் நடத்தியது கடும் கேள்விகுள்ளாக்கி இருக்கிறது. மேலும் திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமம் என சொல்லக்கூடிய நிலையில் தனி ஒருவருக்காக கோவிலை அடைத்து பக்தர்களை அனுமதிக்காமல் தனியாக யாகம் நடத்தியது பக்தர்களுக்குள்ளையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.




திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி  தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் மருமகன் சபரீசன் வள்ளி குகையில் பக்தர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து சிறப்பு யாகம் நடத்தினார். இந்நிலையில் பக்தர்களை உள்ள அனுமதிக்காமல் மக்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்த  இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சபரீசனையும் கண்டித்து பாஜகவின் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடத்த திரண்டனர். இதனால் போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்தனர்.




இதனை அடுத்து பாஜகவிற்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினரிடம் ஆவேசமாக பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, தமிழகம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் என்றால் என்ன என்று ஆவேசமாக பேசினார். தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவினர் திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 320 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண