விஜய் டிவியில் சீசன் சீசனாக ஹிட் அடித்து வரும் ரியலாட்டி ஷோ, ‛Mr&Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சி, ஏற்கனவே ஒளிரப்பான மூன்று சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நான்காவது சீசன் எப்போது வரும் என அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான், இன்று Mr&Mrs சின்னத்திரை நிகழச்சியின் 4வது சீசன் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

சின்னத்திரைகளில் பிரபலமான ஜோடிகளை வைத்து தான், இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த வகையில்  இந்தை முறை யாரெல்லாம் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எகிறிப் போயிருந்தது. வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் மா.க.பா.ஆனந்த் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளனர். நிகழ்ச்சியின் நடுவர்களாக, நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் தொடருகின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் பங்கேற்க உள்ளனர் என்கிற தகவல் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட நிலையில், பங்கும் ஜோடிகளில் பிரபல யூடியூப்பர்ஸ்களான ராம் மற்றும் ஜானுவும் பங்கேற்கிறார்கள். 

 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்களே விஜய் டிவி வாயிலாக அறிவித்த நிலையில், மேலும் சில எதிர்பாராத தம்பதிகளும் இந்நிகழ்ச்சியில் களமிறங்குகின்றனர். 

இதோ அந்த நிகழ்ச்சி தொடர்பாக வெளியான ப்ரொமோக்கள் ஒரு தொகுப்பு...