மூத்த நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார். கணவர்களுடன் கருத்துவேறுபாடு, தந்தையிடம் கருத்துவேறுபாடு, சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு என பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். 


மாணிக்கம், சந்திரலேகா போன்ற படங்களில் நடித்த வனிதா விஜயக்குமார், அதன் பின் அவரது சுய வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகளால் பின்னர் அறியப்பட்டார். அதன் பின், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த வனிதா, தனது தைரியமான பேச்சாலும், அடக்கி ஆழும் முறையாலும் பலரால் பாராட்டப்பட்டார்; சிலரால் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும், தன் நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கும் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் விஜய் டிவியில் வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்தார்.


இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தனிப்பெண்ணாக சுயமாக சில தொழில்களை தொடங்கினார். அதன் படி, ஆடையகம், அலங்கார பொருட்கள் விற்பனையகம் என தன் தொழிலை விரிவுபடுத்தினார் வனிதா. இதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிக்கு மணி அப்டேட் போடுவதும் அவரது வழக்கம். இவை ஒருபுறமிருக்க, தனது மகளுடன் இணைந்து யூடியூப் மூலம் உணவுத் தயாரிப்பு பற்றிய வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். 






அக்டோபர் 5, வனிதா விஜயகுமாரின் பிறந்தநாள். பாங்காக் போயிருந்த அவர், அங்கு தனது பிறந்தநாளை வினோதமாக கொண்டாடியிருக்கிறார். பிறந்தநாளுக்கு எல்லாரும் கேக் வெட்டி கொண்டாடுவோம். ஆனால், வனிதா, நண்டு சமைத்து கொண்டாடியிருக்கிறார். கேக் போல அதை தன் கையில் வைத்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள வனிதா, ‛ஹப்பி ஃபர்த் டே டூ மீ’ என தனக்குத் தானே பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 


அத்தோடு, அந்த வீடியோவும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு பிறந்தநாளை இதுவரை யாரும் கொண்டாடியிருக்க முடியாது என்பது போல தான் வனிதா ஸ்டேட்மெண்ட் இருக்கிறது. பார்க்கலாம், வீடியோவில் என்ன இருக்கிறது என்று!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண