2016-ஆம் ஆண்டு விமான பயணத்தின்போது ஏற்பட்ட தாக்குதல் குறித்து முன்னாள் கணவர் பிராட் பிட் மீது குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஏஞ்சலினா ஜோலி.
ஏஞ்சலினா ஜோலி, தனது முன்னாள் கணவர் குடிபோதையில் தன்னையும் தன்னுடைய குழந்தைகளையும் தாக்கியதாக கூறப்படும் நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு பிறகு விவாகரத்து விண்ணப்பம் செய்துள்ளார். அந்த தனியார் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து விவரங்களை பகிர்ந்துள்ளார்.
ஏஞ்சலினா ஜோலியின் ஆறு குழந்தைகள் அந்த சமயத்தில் 8 முதல் 15 வயதுக்குள் இருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். அதில் ஒருவருடன் ஏஞ்சலினா ஜோலியின் முன்னாள் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வார்த்தைகளால் ஜோலியை சரமாரியாக தாக்கி, தலையை உலுக்கி, தோள் பட்டையை பிடித்து விமானத்தில் உள்ள குளியல் அறையின் சுவரில் தள்ளிவிட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார் ஏஞ்சலினா ஜோலி.
மேலும் ஜோலியின் குழந்தைகளில் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்படும் வகையில் முகத்தில் தாக்கினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் மற்ற குழந்தைகளும் பயந்து அழுதார் என புகாரில் பிராட் பிட்டுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிராட் பிட், ”ஏஞ்சலினா ஜோலியின் கூற்று முற்றிலும் பொய் என்றும் அவை ஆதாரமற்ற கூற்றுகள் என்றும் அவர் கதைகளை உருவாக்கி தன் மீது பொய்யான புகாரை அளித்துள்ளார்” என தெரிவித்தார். மேலும் தான் செய்யாத ஒரு குற்றத்திற்கு பொறுப்பேற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் பிராட் பிட்.
ஏஞ்சலினா ஜோலி நடிகை மற்றும் இயக்குனர் ஆவார். அவரின் முன்னாள் கணவர் பிராட் பிட்டின் ஒரு ஆஸ்கர் விருது பெற்ற நடிகர். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக மிகவும் பிரபலமான பாலிவுட் ஜோடிகள். பத்து ஆண்டுகளாக காதலர்களாக இருந்து பின்னர் 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2016-ல் விவாகரத்து கோரி 2019-ம் ஆண்டு முதல் நீதிபதியின் அறிவுறுத்தலின்படி தனிமையில் இருந்து வருகிறார்கள். இவர்கள் விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.