சினிமாவில் நிலைத்து நிற்க அழகு மட்டுமே போதாது. திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஹீரோயினாக நிலைத்து நிற்க முடியும் என்று நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.


யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து.. "திரையில் என்னைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. எனக்கான வரவேற்பை திரையரங்குகளில் பார்க்கும்போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. நான் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளேன். ஆனால் நடிப்பு என்பது ஒன்றுதான் தளங்கள் மட்டுமே வேறு. அதனால் எனக்கு மீண்டும் சின்னத்திரையில் நடிக்கத் தோன்றினால் நடிப்பேன். அதில் எந்த மனத்தடையும் இல்லை.


அதுபோல் நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு எந்த  ரிலேசன்ஷிப்பிலும் நம்பிக்கை இல்லை. ஆனால் நீங்கள் நான் என்ன மாதிரியான பையனை விரும்புவீர்கள் என அழுத்திக் கேட்பதால் சொல்கிறேன்.. ஊர்ப் பையன்கள் தான் பெஸ்ட். வேற லெவல். நான் காரில் செல்லும் போது குடும்பமாக வெளியில் செல்வோரைப் பார்த்து ஆசைப்படுவேன். ஒருவேளை எனக்கு அந்த மாதிரியான வாழ்க்கை மீதுதான் அடிமனதில் விருப்பம் இருக்கிறது என நினைக்கிறேன். நான் ஒருவேளை என் வாழ்க்கையில் இதை செய்திருக்கலாம் என யோசிப்பது கல்வி. நான் கல்லூரியில் படிக்கவில்லை. எனக்கு கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்து உன் வாழ்க்கையில் இதை சரி செய்து கொள் என்று வரம் கொடுத்தால் நான் காலேஜ் படிப்பேன். மற்றபடி என் வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் உள்ளன. அதுதான் என்னை ஸ்ட்ராங்காக மாற்றும் என நம்புகிறேன். நம்ம மனசுல ஒரு கனவு இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும்.  




திரையில் இன்னும் ஹீரோயின்களை போகப் பொருளாகப் பயன்படுத்துவது தொடர்கிறது. அது மாற வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைப் பார்க்கும் போது பயமும் வருது, கோபமும் வருது. பேஸ்புக் ரெக்வஸ்ட் எல்லாம் நம்பி ஏமாறாதீர்கள். பெற்றோர் சொல்வதையும் கேளுங்கள். பத்திரமாக இருங்கள். நீங்கள் நினைப்பது போல் இந்த உலகம் அவ்வளவு அழகானது அல்ல. நிஜ வாழ்வில் நான் ரொம்பவே தைரியமான பொண்ணு.


எனக்கு தமிழ் சினிமாவில் த்ரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோரைப் பிடிக்கும். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் அட்ஜஸ்மென்ட் என்ற தொந்தரவு இருக்கிறது. நடிகர்களே தயவு செய்து கொஞ்சம் மாறுங்கள். நான் அந்த மாதிரியான நேரடி தொந்தரவை சந்தித்தது இல்லை.


ஆனால் நடிகைகளுக்கு இம்மாதிரியான தொந்தரவு கொடுக்கும் போக்கு இந்திய அளவிலேயே கூட மாற வேண்டும்.” இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார்.