நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டுவந்தனர்.




இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி படு வைரலானது. அதனையடுத்து படத்தின் ஒரு பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்ற சூழலில் வலிமை Glimpse வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு எடுத்து சென்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.


 






வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித் தனது கால்ஷீட்டை இயக்குநர் ஹெச். வினோத்துக்கே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




இதனால் இயக்குநர் சிவாவுக்கு அடுத்து அஜித்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பணியாற்றும் இயக்குநர் என்ற பெயரை ஹெச். வினோத் பெற்றிருக்கிறார்.


 



இதற்கிடையே வலிமை படத்திலிருந்து அம்மா பாடலும், படத்தின் மேக்கிங் காட்சிகளும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் வலிமை படத்தின் விசில் தீம் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இந்த தீமை அஜித் ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்துவருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Parliament Winter Session: தொடர்ந்து அமளி: நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !


Margazhiyil Makkalisai: 'மார்கழியில் மக்களிசை’ குறித்து பொய் தகவல் - சமூக விரோதிகளின் மீது புகார் அளிக்கப்படும் - ஒருங்கிணைப்புக் குழு


Yearender 2021: மாஸ்டர் முதல் மாநாடு வரை.. 2021ல் தியேட்டரில் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள்