Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமானை அடுத்து டிசம்பர் 19-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அபினய் எலிமினேட்டாகி வெளியேறினார்.


இந்நிலையில், இந்த வாரத்தின் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்று தாமரைச்செல்வி தலைவரானார். அதனை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. டாப் 10 போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களை சந்திக்கும் நேரம் இது.


அக்‌ஷரா, சிபி, நிரூப்பின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் ராஜூவின் மனைவியும், தாயாரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் செய்துள்ளனர். இந்த பத்து போட்டியாளர்களில் அதிக கவனம் ஈர்த்து வருபவர் ராஜூ. மற்றப் போட்டியாளர்களை அவர் கையாளும் விதமும், அவர் அடிக்கும் கவுன்டர்களெல்லாம்  மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது. இந்த நிலையில், தனியார் சேனல் ஒன்றுக்கு ராஜூவும் அவரது மனைவியும்  கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ராஜூவை சர்ப்ரைஸ் செய்திருக்கும் அம்மா, மனைவியின் ப்ரொமோ வீடியோவையும் ராஜூ பாய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Bigg boss Raju Jeyamohan | பிக்பாஸ் ராஜூ பாய்க்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் வீடியோ


ப்ரொமோ:2






ப்ரொமோ:1






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்