Valimai Trailer Out | தெறிக்கும் ஸ்டண்டுகள்.. க்ளாஸ் அஜித்.. மாஸ் காட்டும் வலிமை ட்ரைலர்!

வலிமை படத்தின் டிரைலர் இன்று வெளியானது

Continues below advertisement

அஜித் குமார் நடிப்பில் , ஹச்.வினோத் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. வலிமை படத்திற்கான ஹைப் எந்த அளவு இருந்தது , இருக்கிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணைய டிரெண்டிங்கில் கலக்கியது. இந்த சூழலில் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது.  

Continues below advertisement

அப்டேட்.. அப்டேட் என காத்துக்கிடந்த ரசிகர்கள்,  எப்போதாம்பா ட்ரைலர் வெளியிடுவீங்க என காத்திருந்த னர். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படக்குழு ட்ரைலர் வெளியீட்டு தேதியினை இன்று காலை அறிவித்தது. சோனி மியூஸிக் சவுத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உங்களது ஹெட்போன்ஸ் மற்றும் ஸ்க்ரீனுடன்  தயாராக இ்ருங்கள் ..பெருங்கோபம் இன்று  மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது “ என வலிமை படத்தின் டிரைலர் அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி இன்று மாலை ட்ரைலர் வெளியானது. வலிமை ட்ரைலருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

 

ட்ரைலரை காண:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement