Valimai Trailer | வருது வருது... விலகு விலகு... வலிமை வெளியே வருது... மாலையில் டிரைலர் ரிலீஸ்!

Valimai Trailer: வலிமை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி தற்போது உறுதியாகியுள்ளது.

Continues below advertisement

அஜித் குமார் நடிப்பில் , ஹச்.வினோத் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. வலிமை படத்திற்கான ஹைப் எந்த அளவு இருந்தது , இருக்கிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள சூழலில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக இணைய டிரெண்டிங்கில் கலக்கியது. இந்த சூழலில் படத்தின் டிரைலரை எப்போதாம்பா வெளியிடுவீங்க என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படக்குழு தற்போது வெளியீட்டு தேதியினை அறிவித்துள்ளது. சோனி மியூஸிக் சவுத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “உங்களது ஹெட்போன்ஸ் மற்றும் ஸ்க்ரீனுடன்  தயாராக இ்ருங்கள் ..பெருங்கோபம் இன்று  மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது “ என வலிமை படத்தின் டிரைலர் அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் அம்மா பாடல் மற்றும் விசில் தீம் உள்ளிட்டவைகள் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இளைஞர்கள் தங்கள் வாழ்வின் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சனையை பெண் ஒருவர் எவ்வாறு எதிர்க்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை என இயக்குநர் ஹச். வினோத் சமீபத்திய நேர்காணல் ஒன்றிலி கூறியிருந்தார். முழுக்க முழுக்க போலிஸ் கதையாக உருவாகியுள்ளது வலிமை என கூறப்பட்ட நிலையில் இயக்குநர் அதனை மறுத்திருந்தார். மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண அந்த துறையில் மேதையாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. அந்த துறை பற்றி நன்றாக தெரிந்த புத்திசாலியாக இருந்தால் மட்டுமே போதும் என வலிமை படம் குறித்த ஹிண்டையும் கொடுத்திருந்தார் வினோத்.

Photo Gallery | Maaran Movie Stills: மாறன் திரைப்படத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித் தனது கால்ஷீட்டை இயக்குநர் ஹெச். வினோத்துக்கே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளுடன் உருவாக்கப்பட உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola