வலிமை நல்ல படமா... மோசமான படமா... என்கிற விவாதம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அது ஒருபுறமிக்க, சென்டிமெண்ட் தவறாதவர் அஜித், தனது படங்கள் வியாழக்கிழமை வெளியாக வேண்டும், தனது படத்தின் தலைப்பு ‛வி’ என தொடங்க வேண்டும் என பார்த்து பார்த்து திட்டமிடுபவர். ஆனால், அவருக்கே தெரியாத ஒரு சென்டிமெண்ட், அவரது படத்தில் உள்ளது. அது, சீருடை அணிந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் அந்த படம் எடுபடாமல், அல்லது பெரிய வெற்றியை பெறாமல் போவது இதுவரை தொடர்ந்து நடந்து வருகிறது . அது பற்றி ஒரு விரிவான அலசலை பார்க்கலாம். 




உன்னைக் கொடு என்னைத் தருவேன்-(2000):


ராணுவ வீரராக அஜித் நடித்த படம். தீவிரவாதிக்கு மகனாக பிறந்தவரை, தேசபக்தனாக மாற்ற நினைக்கும் தாயின் சபத்தை மகன் நிறைவேற்றும் படம். கதையளவில் ஓகே என்றாலும், எந்த இடத்தில் படம் சறுக்கியது என்பது இதுவரை புதிர் தான். அந்த நேரத்தில் கோலோச்சிய இசை அருவி எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை, இந்த அளவிற்கு படத்தில் எடுபடாமல் போனதும், படத்திற்கு மைனஸ். அஜித்-சிம்ரன் வெற்றி கூட்டணி, இந்த படத்தில் எடுபடவில்லை. திரைக்கதையிலும் கொஞ்சம் கோட்டை விட்டிருந்தனர். இதனால், அஜித் நடித்த முதல் சீரூடை(ராணுவ) திரைப்படம் ஃபிலாப் ஆனது. 


ஆஞ்சநேயா-(2003):


அஜித்தின் முதல் போலீஸ் படம். பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, புஷ்... ஆன படம். வல்லரசு படத்தை எடுத்த மகாராஜன் இயக்கிய அந்த திரைப்படம், மோசமான திரைக்கதையால் தோல்வியை தழுவியது. ஐஏஎஸ் கனவில் உள்ள ஒரு இளைஞனுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அதனால் அவனது பணிக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை முறியடித்து போலீசாகும் இளைஞனுக்கு, அதன் பின் தரப்படும் பிரச்சனைகள் என கதைக்களம் பல கட்டங்களை கடக்கிறது. மணிசர்மா, அஜித்திற்கு இசையமைத்த ஒரே படம். இரண்டாம் பாதி முழுக்க போலீஸ் சீருடையில் அஜித் வந்தும், படம் எடுபடாமல் போனது. 


கிரீடம்-(2007): 


இயக்குனர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிற்கு அறிமுக வாய்ப்பளித்த படம். இதுவும் போலீஸ் ஆக நினைக்கும், ஒரு கான்ஸ்டபிள் மகனின் கதை. நல்ல திரைக்கதை இருந்தும், ஆக்ஷன் போன்ற அஜித்தின் அன்றாட ஃபார்முலாக்கள் இல்லாததால், படம் பெரிய அளவில் போகவில்லை. நல்ல படம் என்கிற பெயரை பெற்றாமல், வசூலிலும் வரவேற்பிலும் பெரிய பெயரை பெறவில்லை. பாடல்கள், பின்னணி நல்ல வரவேற்பை பெற்றன . அஜித்தால் நடிக்க முடியும் என்கிற பெயரை மட்டுமே கிரீடம் தந்தது. 


ஏகன்-(2008):


அஜித்தின் சினிமா வரலாற்றில் மிக மோசமான படமாக வர்ணிக்கப்படும் படம் ஏகன். பல பேருக்கு அப்படி படம் வந்ததையே மறந்திருப்பார்கள். இத்தனைக்கும் இந்தியில் ஹித் அடித்த சாரூக்கான் படத்தை நடன இயக்குனர் ராஜூசுந்தரம் இயக்கியிருந்தார். உளவுப்பிரிவு காவல் அதிகாரியாக, ஒரு பெரிய குற்றவாளியை கைது செய்ய கல்லூரியில் சேர்ந்து உளவாளியாக பணியாற்றுவார் அஜித். உடல் எடை, தொப்பை, தாடி என அஜித் அந்த சமயத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளானார். அவர் கல்லூரியில் மாணவராக நடித்தது தான், படத்திற்கு பெரிய மைனஸ் ஆக பேசப்பட்டது. பின்னாளில் அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாகவும் கூறப்பட்டது. 


என்னை அறிந்தால்- (2015):


கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்-த்ரிஷா வெற்றி கூட்டணி நடித்த படம். முழுக்க முழுக்க போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்த என்னை அறிந்தால், முழுக்க முழுக்க கவுதம் ஸ்டைலில் இருந்தது. தோல்வி இல்லை என்றாலும், விமர்சனங்களுக்கு உள்ளானது . பரபரப்பாக அப்போது ட்ரோல் செய்யப்பட்டது. நீண்ட பயணம், ஸ்லோ ஸ்கிரீன் ப்ளே போன்றவை விமர்சனத்திற்கு காரணமானது. இருப்பினும், வில்லன் அருண் விஜய் உடனான காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. 


விவேகம்- (2017) :


அஜித் நீண்ட நாட்களாக நடிக்க விரும்பிய கதாபாத்திரம். வெளிநாட்டு இண்டர்போல் அதிகாரியாக அஜித் நடித்த விவேகம், பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்தது .இத்தனைக்கும் படம் முழுக்க விறுவிறுப்பாக நகரும். குறை சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை என்றாலும், கடுமையான விமர்சனங்களை விவேகம் சந்தித்தது. பழைய ரஜினி படத்தின் க்ளைமாக்ஸ் போன்று இருப்பதாக குறை கூறினார்கள். எதிர்பார்த்த வெற்றியை விவேகம் பெறவில்லை. 


இவையெல்லாம் அஜித்தின் சீருடை கதாபாத்திரத்தை சின்னாபின்னப்படுத்திய படங்கள். ஆனால், அதிலும் சில படங்கள்... அஜித்தை எங்கேயோ கொண்டு போயின....


மங்காத்தா-(2011):




போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்த மாஸ் படம். ஆனால், துவத்தில் மட்டுமே அவர் போலீஸ். அதன் பின் சஸ்பெண்ட் போலீஸ். ‛எத்தனை நாள் தான்.. கெட்டவானாவே நடிக்கிறது...’ என வில்லனாக நடித்து ஹிட் ஆன படம். நெகட்டிவ் போலீஸ்... வெற்றியை தந்தது. இதனால் போலீஸ் கெட்டப் எடுப்பட்டது என்பதை விட, போலீஸ் இமேஜ் டேமேஜ் ஆனாதால் வெற்றி பெற்றது என்பது தான் மங்காத்தாவுக்கு பொருத்தமாக இருக்கும். 


ஆரம்பம்- (2013): 


அஜித்-விஷ்ணுவர்த்தன் வெற்றி கூட்டணியில் வந்த படம். இதிலும் துப்பறியும் அதிகாரியாக வரும் அஜித், தனது வேலையை துரோகத்தால் இழந்து, தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை களைந்து வெற்றி பெறும். இதிலும், அஜித் போலீஸ் அதிகாரி என்றாலும், அவர் பெரும்பாலும் போலீஸ் பணியை இழந்தவராக தான் கதாபாத்திரத்தை தொடர்வார். நல்ல திரைக்கதை, நல்ல இசை, நல்ல பின்னணி என ஆரம்பம், நல்ல ஆரம்பமாக இருந்தது. 


வலிமை- (2022):


2020ல் தொடங்கி 2022 வரை இழுத்தடிக்கப்பட்டு, கொரோனா தாண்டிவத்தை தாண்டி வெளியாகியுள்ள படம். இந்த படம், முழுக்க முழுக்க போலீஸ் அதிகாரி படம். ஆனால், ஒரு இடத்தில் கூட அஜித் சீருடை அணியவில்லை. அவர் ஏசியாகவும், இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தும் கூட, ஒரு இடத்தில் கூட சீருடை இல்லை. அதற்கு காரணம், கடந்த கால சீருடை காரணமாக கூறப்படுகிறது. கலவை விமர்சனங்களை பெற்றலுாம், அஜித்தின் ஸ்டண்ட், ஆக்ஷன் பெரிய அளவில் பாராட்டை பெற்றுள்ளது. அதற்கு காரணம், சீருடையை அஜித் தவிர்த்தது தான் என்கிறார்கள். 


Also Read: Maha Shivaratri 2022: மகாசிவராத்திரி விரதமுறைகள் தெரியுமா? விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு...