அஜித் குமார் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஹச்.வினோத் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். வலிமை படத்தை பாலிவுட் பிரபலம் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் ஹூமா குரோஷி நாயகியா நடித்துள்ளார். ஆனால் அஜித்துக்கு ஜோடியாக இல்லை என்பது நாம் அறிந்ததுதான். படத்தின் கதை முழுக்க முழுக்க நாயகி ஹூமா குரோஷியை மையமாக வைத்துதான் நகரும் என இயக்குநர் ஹிண்ட் கொடுத்திருந்தார். இந்த நிலையில் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் , பைக் ரேஸர் ஒருவருக்கு நேரடியாக போலிஸாக (SI) மாற்றப்பட்டார். அதைத்தான் அஜித்தின் கதாபாத்திரமாக வைத்திருக்கிறார்களாம். அதாவது அஜித் ஒரு பைக் ரேஸராக இருந்து போலிஸாக மாறியவர், பின்னர் ரேஸிங்கில் ஈடுபட்டிருக்கும் வில்லன்களால் ஹீமா குரோஷி சில பிரச்சனைகளை சந்திப்பார் போலும் , அதனை அதே துறையில் ஒரு காலத்தில் திறமையாக இருந்த அஜித் துப்பறிந்து குற்றவாளிகளை கண்டறிவது போலத்தான் கதை அமைந்திருக்கும் என யூகிக்கப்படுகிறது.
Valimai | Ak | ஒரு ரேஸர் போலீஸான கதை ! - வலிமையில் அஜித் கேரக்டர் முதல் ஓட்டிய பைக் வரை.. சுவாரஸ்ய தகவல்கள் !
அபிநயா எஸ் அருள்குமார் | 26 Dec 2021 11:46 AM (IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் , பைக் ரேஸர் ஒருவருக்கு நேரடியாக.....
அஜித்_குமார்
Published at: 26 Dec 2021 11:46 AM (IST)